முன்னாள் வீரர் கைது

முன்னாள் வீரர் கைது

உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான முன்னாள்  வீரர், இளம் வீரர்களை வெளிநாட்டிற்க்கு அனுப்பி பயிற்சி அளிப்பதாக கூறி ஏமற்றியதற்க்காக கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது உத்திரபிரதேசத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் சௌரவ் பாம்ரி ஆகும்.

புகாரின்படி அவர் ஒரு ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்தி வருகிறார். அதில் கிரிக்கெட் பயிற்சி பெற வரும் இளம் வீரர்களிடம் அவர்களாய் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு அனுப்பி பயிற்சி தருவதாக ஆசை காட்டியுள்ளார். அந்த ஆசையில் மயங்கிய அந்த இளம் வீரர்களும் அவரிடம் ஒவ்வொருவரும் கிட்ட தட்ட 5 முதல் 20 லட்சம் வரை பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.

டெல்லியை சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்த பின் கிரைம் பிரான்ச் ஆணையாளர் ராம கோபால் கூறியதாவது,

இவரை பிடிக்க பல நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தி வந்தோம். ஆனால், அவ்வப்போது தந்து தலைமறைவு இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்தார். தற்போது அவரை அவரது சொந்த ஊரிள் கைது செய்துள்ளோம். என கூறினார்.

சௌரவ் பாம்ரி இந்தியாவில் விஜய் ஹசாரே ட்ராபி, சி.கே நாயுடு ட்ராபி மற்றும் பல்கலைகழங்களுக்கு  இடையேயான கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள ஒரு தனியார் க்ள்பிற்க்காகவும் கிரிக்கெட் ஆடியுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் உத்திரபிரதேசத்தில் உள்ள பரேய்லியில் , பரேய்லி பிரிமியார் லீக்கை கட்னத 2015 ஆண்டு நடத்தியுள்ளார் சௌரவ் பாம்ரி.

Editor:

This website uses cookies.