இந்த விசயத்தில் எங்கள் வீரர்கள் கில்லாடிகள்; டாம் மூடி புகழாரம் !!

இந்த விசயத்தில் எங்கள் வீரர்கள் கில்லாடிகள்; டாம் மூடி புகழாரம்

ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்டு அதற்கேற்ப விளையாடுவதில் ஹைதராபாத் வீரர்கள் சிறந்தவர்கள் என்று அந்த அணியின் பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 11-வது சீசனில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை அந்த அணி விளையாடியுள்ள 12 போட்டிகளில் 9-ல் வெற்றி பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. ஐதராபாத், புனே போன்ற கடினமான ஆடுகளத்திலும், வான்கடே, சின்னசாமி போன்ற பேட்டிங் ஆடுகளத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Kane Williamson is a “pure batsman” who is as dangerous with the bat in T20 as he is in test cricket, says Sunrisers Hyderabad head coach Tom Moody.

சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை விரைவாக மாற்றிக் கொண்டு பந்து வீச்சில் அசத்துகிறார்கள். ஆடுகளத்திற்கு ஏற்ப விரைவாக தங்களை மாற்றிக் கொள்வதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர் சிறந்தவர்கள் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி கூறியுள்ளார்.

இதுகுறித்து டாம் மூடி கூறுகையில் ‘‘நீங்கள் அனைத்து அணியின் பந்து வீச்சாளர்களை ஒப்பிட்டு பார்த்தீர்கள் என்றால், எங்களுடைய பந்து வீச்சாளர்கள் மற்றவர்களை விட ஆடுகளத்திற்கு ஏற்றபடி அதிக அளவில் மாறியிருப்பார்கள். சின்ன மைதானம் என்றால் கூட சூழ்நிலையை தங்களுக்க சாதகமாக்கி 140 முதல் 150 டார்கெட்டிற்குள் எதிரணியை மடக்கி விடுவார்கள்.

“If you look at the comparisons, our bowlers have adapted better than others. They have exploited the conditions, defended low targets of 140-150 runs, even on grounds with small boundaries,” said the Australian.

எங்களுடைய பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார்கள். நாங்கள் வலுவான பந்து வீச்சு யுனிட்டை கட்டமைத்துள்ளோம்’’ என்றார்.

Mohamed:

This website uses cookies.