விராட் கோலி தொடர்ந்து சொதப்புவதற்கு இது தான் காரணம்; ரவி சாஸ்திரி சொல்கிறார் !!

நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி தொடர்ந்து சொதப்பி வருவது குறித்தான தனது கருத்தை இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த கால ஐபிஎல் தொடர்களில் எவ்வளவு திறமையான வீரர்கள் இருந்தாலும், தொடர்ந்து சொதப்புவதை மட்டுமே வேலையாக வைத்திருந்த பெங்களூர் அணி, இந்த தொடரில் வழக்கத்திற்கு மாறாக மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

பெங்களூர் அணி இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்து மற்ற ஐந்து போட்டிகளிலும் மிரட்டல் வெற்றி பெற்றிருந்தாலும், பெங்களூர் அணியின் முக்கிய வீரரான விராட் கோலி பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவது பெங்களூரின் அணியின் பெரிய பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது.

கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டதால் இந்த தொடரில் விராட் கோலியிடம் இருந்து அவரது பழைய ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் என ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்திருந்தனர், ஆனால் விராட் கோலியோ இந்த தொடரில் கடுமையாக திணறி வருகிறார்.

விராட் கோலியின் தொடர் சொதப்பல் ஆட்டம் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளதால், முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் விராட் கோலியின் மோசமான பேட்டிங் குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், விராட் கோலியின் மோசமான பார்ம் குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரும், இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, விராட் கோலிக்கு சிறிது ஓய்வு கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரவி சாஸ்திரி பேசுகையில், “விராட் கோலி அதிகம் விளையாடிவிட்டார். யாருக்காவது ஓய்வு அளிக்க வேண்டும் என்றால் அது விராட் கோலிக்கு தான். என்னுடைய அனுபவத்தில் விராட் கோலிக்கு இன்னும் 6 முதல் 7 ஆண்டுகள் வரை கிரிக்கெட் வாழ்க்கை மீதம் இருக்கிறது. அதில் அவர் திறம்பட விளையாட வேண்டும் என்றால் அவருக்கு கட்டாயமாக சில நாட்கள் ஓய்வு தேவை. அவருடைய மூளை கிரிக்கெட் குறித்தே அதிகம் சிந்தித்து தளர்ந்துவிட்டது. மீண்டும் புத்துணர்வு பெறுவதற்கு ஓய்வு எடுக்க வேண்டும். இந்த பிரச்சனையை அவர் முதலில் கவனிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.