கவுதம் கம்பிரை கிழித்து எடுக்கும் முன்னால் இந்திய பயிற்சியாளர்!

கவுதம் கம்பீர் புறத்தோற்றத்திலும் உடல்மொழியிலும் தோன்றுவது போல் அவ்வளவு மன ரீதியாக பலமானவர் அல்ல, அவருக்கு பயமும், பதற்றமும், பாதுகாப்பின்மை உணர்வும் அதிகம் உள்ளவர் என்று முன்னாள் உடல்/மனவளப் பயிற்சியாளர் பாடி அப்டன் தனது புதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவரது பயமும், பதற்றமும், பாதுகாப்பின்மை உணர்வும் அவரது பேட்டிங்கைப் பாதித்ததில்லை என்று தன் புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். கம்பீர் இப்போது பாஜக சார்பில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஆனால், “அப்டான் பார்வை முற்றிலும் உண்மை, அவர் கூறுவதில் ஒன்றும் தவறில்லை, அவரது பாதுகாப்பின்மைகளையும் அவர் நன்றாக ஆவணப்படுத்தியுள்ளார்” என்று கம்பீர் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.

‘The Barefoot Coach’, (வெறுங்கால் பயிற்சியாளர்) என்ற புத்தகத்தில் உயர்மட்ட விளையாட்டு வீரர்களின் மனோபலம் என்பது பெரிதும் ஊதிப்பெருக்கப்படுவதாகக் கூறும் அப்டன் சூழ்நிலைகளுக்கு அவர்கள் சரியாக வினையாற்றுவார்கள் என்பதையும் மறுக்கிறார்.

“நான் கவுதம் கம்பீருக்கு மனவளப் பயிற்சி அளிக்கும் போது, 2009-ல் அவர் சர்வதேச சிறந்த கிரிக்கெட் வீரராகத் தேர்வு செய்யப்பட்டவர். ஆனால் அவர் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக வந்ததற்கு நான் எந்தவிதத்திலும் காரணமல்ல.

நூறு ரன்கள் அடித்தாலும் கம்பீர் மகிழ்ச்சியடைய மாட்டார், எப்போதும் செய்த தவறுக்காக வலியுடனேயே இருப்பார். தன்னம்பிக்கை, மனவலிமை இன்மை என்ற இரு துருவங்களில் கம்பீர் எப்போதும் மனவலிமையின்மையில்லாதவர் என்ற பக்கம்தான் இருந்துள்ளார். அதாவது இதர்கு 100 மதிப்பெண் வைத்துக் கொண்டால் கம்பீர் 20-40 மார்க்தான் வாங்குவார். 150 ரன்கள் எடுத்தால் 200 எடுக்கவில்லையே என்பதில் அதிகவருத்தம் அடைந்து உடைந்து விடுவார்.

கம்பீரை இதனாலேயே தானும் கேரி கர்ஸ்டனும், ‘எதிர்மறையானவர், தன்னம்பிக்கையற்றவர்’ என்று முத்திரைக் குத்த வேண்டியதாயிற்று என்கிறார் பாடி அப்டன்.

“மனவலிமை என்ற ஒரு வெகுஜன் அளவுகோலின் படி பார்த்தால் நான் பணியாற்றிய வீரர்களிலேயே மிகவும் மனவலிமை குன்றியவர், பயமும் பதற்றமும் நிறைந்த ஒரு வீரர் உண்டு என்றால் அது கவுதம் கம்பீர்தான். ஆனால் அவர் அதையும் தாண்டி உறுதிகொண்ட சிறந்த பேட்ஸ்மென் என்பதில் சந்தேகமில்லை. அதனால்தான் 2011 உலகக்கோப்பை இறுதியில் அவர் சிறப்பாக ஆடினார் (97 ரன்கள்)” என்றார் அப்டன்.

ஆனால் கம்பீர் இது பற்றி கூறும்போது, “சர்வதேச கிரிக்கெட் வீரனாக நான் என்னை வேறுமட்டத்துக்கு உயர்த்திக் கொள்ளவே ஆசைப்பட்டுள்ளேன் அதனால்தான் 100 அடித்தால் கூட எனக்கு திருப்தி தராது. அவர் கூறுவதில் தவறு ஒன்றும் தெரியவில்லை” என்றார்.

Sathish Kumar:

This website uses cookies.