விமர்சனங்களால் ஒரு மூலையை நோக்கி தள்ளப்படும் நேரங்களில் எல்லாம் நாங்கள் சிறப்பாக விளையாடுகிறோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் பர்மிங்காமில் நடைபெற்ற ஆட்டத்தில் தோல்வியை சந்திக்காமல் வலம் வந்த நியூஸிலாந்து அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி. 238 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி பாபர் அஸாமின் அபாரமான சதத்தால் 49.1 ஓவரில் வெற்றியை வசப்படுத்தியது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணியானது அரை இறுதிக்கு முன்னேறு வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக்கொண் டது. நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத் துக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் கேப் டன் சர்பிராஸ் அகமது கூறுகை யில், ‘‘ஆட்டத்தின் முடிவை பார்க்க சிறப்பாக உள்ளது. எப்போது எல்லாம் பாகிஸ் தான் அணி விமர்சனங் களால் மூலையை நோக்கி தள்ளப்படு கிறதோ, அப்போது எல்லாம் நாங்கள் சிறப் பாக விளையாடுகிறோம்
மைதானத்தில் எங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. கிரிக்கெட்டில் பீல்டிங் மிகவும் முக்கியமானது. ஆனால் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்திலும் நாங்கள் சிறப்பாக பீல்டிங் செய்யவில்லை. இந்த விஷயத்தில் பயிற்சியின் போது கடினமாக பணிபுரிகிறோம்.
பந்து வீச்சை பொறுத்தவரையில் நியூஸிலாந்துக்கு எதிராக மொகமது அமீர் தொடக்கம் முதலே சிறப்பாக வீசினார். அவரைத் தொடர்ந்து ஷாகீன் ஷா அப்ரீடியும் அசத்தினார். நடு ஓவர்களில் ஷதப் கானும் எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்பதினார். இதன் பின்னர் பேட்டிங்கில் பாபர் அஸாம், ஹாரிஸ் சோஹைல் நேர்த்தியாக விளையாடினார்கள்.
என்னை பொறுத்தவரையில் பாபர் அஸாம் விளையாடிய இன்னிங்ஸ்களில் இந்த ஆட்டம் மிகச்சிறந்த ஆட்டங்களுள் ஒன்றாக அமைந்துவிட்டது. ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்ததால் 50 ஓவர்கள் வரை முழுமையாக பேட் செய்ய தீர்மானித்தோம். அழுத்தத்தை சரியாக கையாண்ட ஹாரிஸ் சோஹைலை பாராட்டியே ஆக வேண்டும்” என்றார். – ஏஎப்பி