விடாது பெய்த மழையில் பிழைத்துக்கொண்ட பாக்., அணி; முதல் இன்னிங்சில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்! திணறும் இங்கிலாந்து!

விடாது பெய்த மழையில் பிழைத்துக்கொண்ட பாக்., அணி; முதல் இன்னிங்சில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்! திணறும் இங்கிலாந்து!

இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 236 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் இங்கிலாந்து அணி 7 ரன்களுக்கு  ஒரு  விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் மோதி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

பாகிஸ்தான் அணி துவக்கம் முதலே இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் மிகவும் தடுமாறி வந்தது. முதல் நாள் ஆட்டத்தில் 126 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. இதில் பாகிஸ்தான் அணிக்கு அபித் அலி 60 ரன்களையும், பாபர் அசம் 47 ரன்களையும் எடுத்தனர்.

இரண்டாவது நாளில் மீண்டும் பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணி 223 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. அதன்பின்னர் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

மூன்றாம் நாள் ஆட்டத்திலும் துவக்கம் முதலே மழை பெய்துகொண்டு இருந்ததால் பந்துவீசப்படாமல் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. ஒருவழியாக மழை நின்ற பிறகு நான்காம் நாள் ஆட்டம் நேற்று துவங்கியது. இதில் பாகிஸ்தான் அணி 236 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி, 7 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தபோது மீண்டும் மழை பெய்யத் துவங்கியதால் ஆட்டம் தடைபட்டது. பின்னர் இறுதி வரை மழை பெய்து கொண்டே இருந்ததால் நான்காம் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 200 ரங்களுக்கு. மேல் முன்னிலை பெற்று, அதன் பிறகு பாகிஸ்தான் அணியை ஆல் அவுட் செய்வது என்பது ஒரே நாளில் சாத்தியம் இல்லை. அதனால் இந்த போட்டி டிராவில் முடிவடையும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

தோல்வியை தழுவும் நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி மழையால் தப்பிப் பிழைத்து டிராவில் போட்டியை முடிக்கவிருக்கிறது.

Prabhu Soundar:

This website uses cookies.