இந்தியா மட்டும் இல்லை… ஒட்டுமொத்த உலகமும் இப்ப நம்மள பாத்து சிரிக்குது; பாகிஸ்தான் அணி மீது முன்னாள் வீரர் கடும் கோவம் !!

இந்தியா மட்டும் இல்லை… ஒட்டுமொத்த உலகமும் இப்ப நம்மள பாத்து சிரிக்குது; பாகிஸ்தான் அணி மீது முன்னாள் வீரர் கடும் கோவம்

இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டிக்காக மிக மோசமான ஆடுகளத்தை தயார் செய்த பாகிஸ்தான் அணியை அந்த அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தான் சென்ருள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி பாகிஸ்தானின் ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணிக்கு அந்த அணியின் ஒவ்வொரு போட்ஸ்மேன்களும் போட்டி போட்டு பாகிஸ்தானின் பந்துவீச்சை சிதறடித்து, அடுத்தடுத்தடுத்து சதமும் அடித்ததன் மூலம் போட்டியின் முதல் நாளிலேயே இங்கிலாந்து அணி 500+ ரன்கள் குவித்து வரலாறு படைத்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 657 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய பாகிஸ்தான் அணியிலும் மூன்று வீரர்கள் சதம் அடித்து அசத்தியதன் மூலம் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள பாகிஸ்தான் அணி 499 ரன்கள் குவித்துள்ளது.

பாகிஸ்தான் இங்கிலாந்து இடையேயான இந்த டெஸ்ட் போட்டி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆடுகளத்தின் தன்மை மிக மோசமாக இருப்பதால் இரு அணி பேட்ஸ்மேன்களும் எவ்வித சிரமமும் இல்லாமல் இலகுவாக சதம் அடித்து வருகின்றனர். மட்டுமான ஆடுகளத்தை தயார் செய்த பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் பலரே மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அந்தவகையில், இங்கிலாந்து பாகிஸ்தான் இடையேயான இந்த போட்டி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் பாகிஸ்தான் அணியை கேலி செய்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து டேனிஷ் கனேரியா பேசுகையில், “ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் பாகிஸ்தான் அணியை கிண்டலும்,கேலியும் செய்து வருகிறது. டெஸ்ட் போட்டிகளின் மீது அனைவரின் கவனமும் மெல்ல மெல்ல திரும்பி வரும் நிலையில், பாகிஸ்தான் அணி ஒட்டுமொத்தமாக அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் வீணடித்துள்ளது. இந்தியாவில் போட்டி நடைபெற்றால் இந்திய அணி சுழற்பந்துவீச்சிற்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்யும். பாகிஸ்தான் அணி அதை கூட செய்யவில்லை. இந்த ஆடுகளம் பேட்ஸ்மேன்கள் பல பல சாதனைகள் படைக்க உதவுமே தவிர வேற எதற்கும் இது உதவாது. ரசிகர்களுக்கு இந்த போட்டி சலிப்பை மட்டுமே ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.