பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் பாபர் ஆசாம், இந்திய கேப்டன் விராட் கோலியின் இடத்தை விரைவில் பிடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் டி20 அணியின் கேப்டனாக இருந்து வரும் முன்னணி வீரர் பாபர் அசாம் அவ்வபோது இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி உடன் ஒப்பிடப்பட்டு வருகிறார்.
ஆனால், நான் ஒரு தீவிர விராட்கோலியின் ரசிகர் என்று கூறும் 24 வயதான பேட்ஸ்மேன், அண்மையில் ஒரு நேர்காணலில் ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தரவரிசையில் உலக நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருந்துவரும் கேப்டன் கோலியை போல தானும் அந்த இடத்திற்கு வர விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “விராட்கோலி ஏற்கனவே நிறைய சாதித்துள்ளார். அவர் இந்தியாவின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர். என்னை அவருடன் ஒப்பிட முடியாது. நான் தற்போது தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்ந்திருக்கிறேன்.
ஆனால் அவர் இன்று இருக்கும் நம்பர்-1 இடத்தை அடையவும் விரும்புகிறேன். அந்தநாள் வெகு தூரத்தில் இல்லை எனவும் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Pakistan fielders on day one almost all of them with some sort of tape on their hands Babar Azam who has the duty of shining the ball
மேலும் அவர் தெரிவிக்கையில், “ஊடகங்களும் மக்களும் என்னையும் கோலியையும் நிறைய ஒப்பிட்டுள்ளனர., ஆனால் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக இருக்க, டெஸ்டில் நிறைய ரன்கள் எடுக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் கோஹ்லி தொடர்ச்சியாக செய்து வருகிறார். இதனால் அவர் நம்பர்-1 ஆக இருக்கிறார்.
என்னை கோலி அல்லது ஸ்டீவ் ஸ்மித்துடன் என்னை ஒப்பிட்டுப் பார்கையில் நான் அந்த அழுத்தத்தை ஆரோக்கியமாக ஏற்கிறேன. அப்போது எனக்கு நிறைய பொறுப்புகள் இருப்பதாக உணர்கிறேன் என்றார்.” என தெரிவித்துள்ளார்.