இந்திய அணியை சீண்டிபார்க்கும் பாகிஸ்தான் கேப்டன் !!

இந்திய அணியை சீண்டிபார்க்கும் பாகிஸ்தான் கேப்டன்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியை விட தங்கள் வீரர்கள் சிறப்பாக தயாரானதாக பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஜ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 டி-20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. டி-20 தொடரை இந்திய அணி (2-1) வென்றது. ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி (2-1) கைப்பற்றியது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இரு அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் கேப்டனாக  கோஹ்லி படு மோசமான தோல்வியை சந்தித்தார்.

DUBAI, UNITED ARAB EMIRATES – SEPTEMBER 22: Pakistan captain Sarfraz Ahmed speaks to the media during a press conference at Dubai Cricket Stadium on September 22, 2016 in Dubai, United Arab Emirates. (Photo by Francois Nel/Getty Images)

இந்நிலையில் தற்போது படுகேவலமாக தடுமாறும் இந்திய அணிக்கு, தங்கள் வீரர்கள் சிறப்பாக தயாரானதாக பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஜ் கூறுகையில், ‘நான் இங்கிலாந்துக்கு இரண்டு முறை சுற்றுப்பயண்ம் செய்துள்ளேன். இரண்டு முறையும், பாகிஸ்தான் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எந்த ஆசிய அணி இங்கிலாந்து சென்றாலும் அங்கு தடுமாறுவது சகஜம் தான். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் அங்கு சாதிக்க, 25 நாட்களுக்கு முன்பே அங்கு சென்றது தான் காரணம். அந்த வகையில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் எவ்வளவோ பரவாயில்லை. ’ என்றார்.

Mohamed:

This website uses cookies.