எங்களுக்குள்ள ஆயிரம் சண்ட இருக்கலாம் ஆனா நீ இந்தியாவ தப்பா பேச கூடாது; இந்திய அணிக்கு பாகிஸ்தான் ஆதரவு !!

எங்களுக்குள்ள ஆயிரம் சண்ட இருக்கலாம் ஆனா நீ இந்தியாவ தப்பா பேச கூடாது; இந்திய அணிக்கு பாகிஸ்தான் ஆதரவு

இந்திய அணியை பற்றி எந்தவித ஆதாரமுமில்லாமல் தவறாக பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரரிடம், அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டுள்ளது.

உலக கோப்பையின் லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், பாகிஸ்தான் அணி எஞ்சிய 4 போட்டிகளிலும் வென்று, அதேநேரத்தில் இங்கிலாந்து அணிக்கு மீதமிருந்த போட்டிகளில் ஒன்றில் தோற்றால்கூட, பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது.

Cricket – ICC Cricket World Cup – India v Pakistan – Emirates Old Trafford, Manchester, Britain – June 16, 2019 India’s Vijay Shankar celebrates the wicket of Pakistan’s Imam-ul-Haq with team mates Action Images via Reuters/Lee Smith

பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு, அந்த அணியின் கையில் மட்டுமல்லாது இங்கிலாந்து அணியின் கையிலும் இருந்தது. அப்படியான சூழலில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு வரக்கூடாது என்பதற்காக இந்திய அணி வேண்டுமென்றே தோற்கும் என்று சர்ச்சையான கருத்தை கூறியிருந்தார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி.

பாசித் அலியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு முன்னேறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறியது. உலக கோப்பை முடிந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் ஆட்டத்தை கிரிக்கெட் கமிட்டி வரும் ஆகஸ்ட் 2ம் தேதி ஆய்வு செய்யவுள்ளது.

இந்நிலையில், இந்திய அணியை பற்றி தவறாக பேசிய பாசித் அலி, கராச்சி அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருக்கிறார். இந்நிலையில், இந்திய அணியை பற்றி எந்தவித ஆதாரமும் இல்லாமல் தவறாக பேசியது குறித்து பாசித் அலியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டுள்ளது.

Mohamed:

This website uses cookies.