ஹராரேயில் இருந்து புலவாயோ செல்ல இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயணம் பணப் பிரச்சனையால் தள்ளிப் போகியுள்ளது.
பணப் பிரச்சனையால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயணத்தில் தாமதம்
ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரேயில் ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 1-ந்தேதியில் இருந்து 8-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த தொடருக்குப்பின் ஜிம்பாப்வே – பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற வெள்ளிகிழமை (13-ந்தேதி) தொடங்குகிறது. இந்த ஐந்து போட்டிகளும் புலுவாயோ-வில நடக்கிறது.
இதற்காக பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) ஹராரேயில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. ஆனால், பணப் பிரச்சனை காரணமாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் வீரர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலுக்கு முன்பணம் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் நட்சத்திர ஓட்டல் பாகிஸ்தான் வீரர்களுக்கு தங்கும் அறை ஒதுக்கவில்லை. ஆகவே பாகிஸ்தான் வீரர்கள் புலவாயோ புறப்பட்டுச் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஒருவேளை பணப் பிரச்சனை தீர்ந்துவிட்டால், பாகிஸ்தான் அணி நாளை காலை புலவாயோ சென்று, அதன்பின் மாலையில் பயிற்சியை மேற்கொள்ளும். ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூலை 13-ந்தேதி முதல் ஜூலை 22-ந்தேதி வரை நடக்கிறது.
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் அகமது ஷெசாத் தடை செய்யபட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு கிரிக்கெட் விளையாட தற்காலிக தடையை விதித்துள்ளது.
26 வயதாகிய பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் அகமது ஷெசாத்தின், ஊக்க மருந்து பரீசோதனை கடந்த மே மாதம் அன்று பாகிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் தொடரின் போது எடுக்கப்பட்டது. அதில் அவரது சிறுநீரில் தடை செய்யபட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.
இதையெடுத்து தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு தற்காலிக தடையை விதித்தது மட்டுமில்லாமல், தன்னுடைய மற்றொரு மாதிரியை அவர் ஜூலை 18 ஆம் தேதிக்குள் சமர்பிக்க அவருக்கு கால அவகாசம் தந்துள்ளது.
மேலும், ஜூலை 28 ஆம் தேதிக்குள் அவர் பதில் அளிக்கவேண்டும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் நடந்த ஸ்காட்லாந்துக்கு எதிரான இரண்டு டி 20 தொடரில் இவர் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.