இலங்கை அணியுடன் மோத போகும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் அனுபவ முன்னாள் வீரரான மூத்த வீரர் சோயப் மாலிக் திடீரென கழட்டிவிட பட்டுள்ளார். சப்ராஸ் அகமெட் கேப்டனாக நீடிக்கிறார், துணை கேப்டனாக பாபர் ஆஸம் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தலைமை அணி தேர்வாளருமான மிஸ்பா உல் ஹக் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நியமனங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
எதிர்காலக் கேப்டனாக பாபர் ஆஸம் நியமிக்கப்படும் வாய்ப்பை அதிகப்படுத்துவதற்காக அவர் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
“ஓய்வறையில் வீரர்களிடையே கலாச்சாரம் மற்றும் மனநிலை மாற்றங்கள் தேவை என்பதை நான் வலியுறுத்துகிறேன் அப்போதுதான் சிறந்த முடிவுகள் கிடைக்கும் சர்பராஸ் அகமெட் இந்த குறிக்கோள்களை எட்ட எனக்கு உதவியாக இருப்பார்.
கடந்த இரண்டு வாரங்களாக சர்பராசுடன் நான் இணைந்து பணியாற்றினேன், அதாவது அவரது கிரிக்கெட்டின் சிலபகுதிகளை மேம்படுத்தி அதன் மூலம் கேப்டனாக அவரது ஒட்டுமொத்த திறனையும் வளர்க்கப் பணியாற்றினோம். இது திறமைக்கான உலகம் என்பதை உணர்ந்து ஒவ்வொரு முறையும் களத்தில் சிறந்த திறமையை வெளிப்படுத்துவது இப்போதைய காலக்கட்டங்களில் அவசியம் என்பதை இருவரும் உணர்ந்தோம். ” என்றார் மிஸ்பா உல் ஹக்.
சர்பராஸ் அகமெடும் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் கருத்தை எதிரொலித்து தான் மிஸ்பா கேப்டன்சியின் கீழ்தான் அதிகம் ஆடியுள்ளதாகத் தெரிவித்தார்.
இலங்கை தொடருக்கான அணி
சர்பராஸ் அகமது (கே), பாபர் அசாம் (து.கே), ஆபிட் அலி, அகமது ஷெஜாத், ஆசிப் அலி, பஹீம் அஷ்ரப், ஃபக்கர் ஜமான், ஹரிஸ் சோஹைல், ஹசன் அலி, இப்திகார் அகமது, இமாத் வாசிம், இமாம் உல் ஹக், முகமது அமீர், முகமது ஹஸ்னைன் , முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், சதாப் கான், உமர் அக்மல், உஸ்மான் ஷின்வாரி, மற்றும் வஹாப் ரியாஸ்.
அணி உதவி
மிஸ்பா-உல்-ஹக் (தலைமை பயிற்சியாளர் மற்றும் தலைமை தேர்வாளர்), மன்சூர் ராணா (அணி செயல்பாடுகள், மற்றும் நிர்வாக மேலாளர்), வக்கார் யூனிஸ் (பந்துவீச்சு பயிற்சியாளர்), கிராண்ட் பிராட்பர்ன் (பீல்டிங் பயிற்சியாளர்), ஷாஹித் அஸ்லம் (தலைமை பயிற்சியாளரின் உதவி), கிளிஃப் டீக்கன் (பிசியோதெரபிஸ்ட்), யாசிர் மாலிக் (பயிற்சியாளர்), மேஜ் (ஓய்வு) அசார் ஆரிஃப் (பாதுகாப்பு மேலாளர் – இலங்கைத் தொடருக்கான), கர்னல் (ஓய்வு) உஸ்மான் அன்வாரி (ஆஸ்திரேலியாவின் சுற்றுப்பயணத்திற்கான பாதுகாப்பு மேலாளர்), ராசா கிட்ச்லேவ் (குழு ஊடக மேலாளர்) , தல்ஹா பட் (குழு ஆய்வாளர்) மற்றும் மலாங் அலி