இந்த இரண்டு வீரர்களை வைத்து இங்கிலாந்து அணியை திணறடிப்போம்; எச்சரிக்கும் பாகிஸ்தான் கேப்டன் !!

இந்த இரண்டு வீரர்களை வைத்து இங்கிலாந்து அணியை திணறடிப்போம்; எச்சரிக்கும் பாகிஸ்தான் கேப்டன்

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

ஆகஸ்ட் ஐந்தாம் தேதி துவங்க உள்ள இந்த டெஸ்ட் தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்காக முழுமையாக தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலி தெரிவித்துள்ளார்.

Britain Cricket – England v Pakistan – Second Test – Emirates Old Trafford – 22/7/16
England’s Alastair Cook in action
Action Images via Reuters / Jason Cairnduff
Livepic
EDITORIAL USE ONLY.

இது குறித்து அசார் அலி கூறியதாவது;

‘ஷாஹீன் ஷா மற்றும் நசீம் ஆகியோர் சமீபத்தில் நடைபெற்ற தொடரில் பந்து வீசிய வகையில் அவர்களை இருவரையும் அணியில் பெற்றிருப்பது அதிர்ஷ்டம். நாங்கள் இங்கிலாந்து மண்ணிற்கு ஏற்றபடி அனுபம் பெற்றுள்ள முகமது அப்பாஸை பெற்றுள்ளது சிறப்பானது. சோஹைல் கான் இந்த தொடரில் இடம்பிடித்துள்ளார். வீரர்களுடன் இவரது அனுபவத்தை பகிர்ந்து கொள்வார். எங்களுடைய பந்து வீச்சாளர்கள் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவார்கள். யாசீர் ஷாவின் அனுபவத்தை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர் லெக்-ஸ்பின்னர். இளம் வீரர்களை வழிநடத்துவது முக்கியமானது.இந்த தொடரை வெல்லுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.