மிக முக்கியமான போட்டி… பாகிஸ்தானிற்கு எதிராக முதலில் பேட்டிங் செய்கிறது ஆஃப்கானிஸ்தான் !!

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும், ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன.

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான கடந்த போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, இந்த போட்டியில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே ஆடும் லெவனுடன் களமிறங்கியுள்ளது.

வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஆஃப்கானிஸ்தான் அணி ஹசரத்துல்லாஹ் ஜாசி, கரீம் ஜனத், ரசீத் கான் போன்ற வீரர்களுடன் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

ஆஃப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையேயான இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழக்க நேரிடும்.

ஆஃப்கானிஸ்தான் அணியின் ஆடும் லெவன்;

ஹசரத்துல்லாஹ் ஜாசி, ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ், இப்ராஹிம் ஜார்டன், நஜிபுல்லாஹ் ஜார்டன், முகமது நபி, கரீம் ஜனத், ரசீத் கான், அஸ்மத்துல்லாஹ் ஒமர்ஜாய், முஜிபுர் ரஹ்மான், ஃபரீத் அஹமத் மாலிக், ஃபாரூகி.

பாகிஸ்தான் அணியின் ஆடும் லெவன்;

முகமது ரிஸ்வான், பாபர் அசாம், ஃபகர் ஜமான், இஃப்திகார் அஹமத், குஷ்தில் ஷா, ஆசிஃப் அலி, முகமது நவாஸ், ஷாதப் கான், ஹாரீஸ் ரவூஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா.

 

Mohamed:

This website uses cookies.