இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பரிதவித்த பாகிஸ்தான் வீரர்கள்; இங்கிலாந்து அணிக்கு எளிய இலக்கு !!

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பரிதவித்த பாகிஸ்தான் வீரர்கள்; இங்கிலாந்து அணிக்கு எளிய இலக்கு

டி.20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும், டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறியது. அந்த அணியின் துவக்க வீரர்களான முகமது ரிஸ்வான் 15 ரன்களிலும், பாபர் அசாம் 32 ரன்களிலும் விக்கெட்டை இழந்தார்.

மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய முகமது ஹாரீஸ் 8 ரன்னில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். இதன்பின் களத்திற்கு வந்த சான் மசூத் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 38 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் ஷாதப் கானை (20 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறியதால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்துள்ள பாகிஸ்தான் அணி வெறும் 138 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக சாம் கர்ரான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடில் ரசீத் மற்றும் கிரிஸ் ஜோர்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Mohamed:

This website uses cookies.