மொத்த கோவத்தையும் நெதர்லாந்து மீது காட்டிய பாகிஸ்தான் அணி… தட்டு தடுமாறி 91 ரன்கள் எடுத்தது நெதர்லாந்து !!

மொத்த கோவத்தையும் நெதர்லாந்து மீது காட்டிய பாகிஸ்தான் அணி… தட்டு தடுமாறி 91 ரன்கள் எடுத்தது நெதர்லாந்து

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 29வது போட்டியில் பாகிஸ்தான் அணியும், நெதர்லாந்து அணியும் மோதி வருகின்றன.

 

பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான ஸ்டீபன் 6 ரன்னிலும், மேக்ஸ் 8 ரன்னிலும் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர்.

அடுத்தடுத்து கலமிறங்கிய வீரர்களும் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறினர். அக்கெர்மான் (27) மற்றும் எட்வர்ட்ஸ் (15) ஆகிய இருவரை தவிர மற்றவர்கள் ஒருவர் கூட ஒற்றை இலக்க ரன்னை தாண்டாததால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு நெதர்லாந்து அணி வெறும் 91 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஷாதப் கான் மூன்று விக்கெட்டுகளையும், முகமது வாசிம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Mohamed:

This website uses cookies.