பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவு… மிக மிக முக்கியமான வீரர் விலகல்; உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 18 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் 5ம் தேதி முதல் நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெற உள்ளது. உலகக்கோப்பை என்பது அனைத்து அணிகளின் கனவு என்பதால் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றன.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான தனது அணியை பாகிஸ்தான் அணியும் தற்போது அறிவித்துள்ளது.
பாபர் அசாம் தலைமையிலான 18 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில், ஃபகர் ஜமான், ஷாதப் கான், ஷாகின் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூஃப் போன்ற சீனியர் வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர்.
நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த பாகிஸ்தான் அணியின் மிக முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவரான நசீம் ஷா, காயத்தில் இருந்து குணமடையாததால் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்தும் விலகியுள்ளார். நசீம் ஷா விலகியுள்ளது பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
நசீம் ஷாவிற்கு பதிலாக ஹசன் அலி உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர முகமது வாசிம் ஜூனியர், சல்மான், இஃப்திகார் அஹமத், முகமது நவாஸ் போன்ற வீரர்களும் உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணி;
பாபர் அசாம் (கேப்டன்), ஷாதப் கான் (துணை கேப்டன்), ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், அப்துல்லாஹ் சஃபீக், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஆகா சல்மான், சவூத் சக்கீல், இஃப்திகார் அஹமத், முகமது நவாஸ் உஸாமா மிர், ஷாகின் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூஃப், ஹசன் அலி, முகமது வாசிம் ஜூனியர்.