பாண்டியா பிரதர்ஸ் ஒரே நேரத்தில் இந்திய அணியில் இருக்க வேண்டும் – முன்னால் வீரர் கிரன் மோர்

 

ஆல்-ரவுண்டர் க்ருனால் பாண்டியா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், இந்திய டி20 அணியில் அறிமுகமாகின்றனர்.

இங்கிலாந்துக்கு எதிராக 3 டி20, 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்து – இந்தியா மோதும் முதல் டி20 போட்டி இன்று (3ம் தேதி) மான்செஸ்டரில் நடக்கிறது

இந்த நிலையில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்த பும்ரா மற்றும் வாஷிங்க்டன் சுந்தர், காயம் காரணமாக விலகினர். அவர்களுக்கு பதில் ஆல்-ரவுண்டர் க்ருனால் பாண்டியா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், இந்திய அணியில் அறிமுகமாகிறார்கள். 

இப்படி இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கும் குருணால் பான்டோயாவை டி20 போட்டிகளில் இனிகிய லெவனில் எடுக்க வேண்டும் என முன்னாள் கீப்பர் கிரன் மோர் கூறியுள்ளார்.

மேலும், குருணால் பாண்டியா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இந்திய அணியிக் இருந்தால் என லாபம் எனவும் கூறியுள்ளார்.

ஹர்திக் மற்றும் குருணால் ஆகிய இருவருக்கும் சின்ன வயதில் இருந்து பயிற்சியாளராக இருந்து வருபவர் கிரண் மோர்.

இது குறித்து அவர் கூறியதாவது,

நான் பாண்டியா பிரதரஸை 4 வயதில் இருந்து பார்த்து வருகிறேன். அதிலும் க்ருனால் பாண்டியாவை அப்போதே கணித்து விட்டேன், அவனால் பெரிதாக சாதிக்க முடியும் என தெரியும். கடந்த மூன்று மாதங்களாக காயத்தில் இருந்தான்.

அப்படி இருந்து ஐபிஎல் தொடரில் ஆடி.. யோயோ டெஸ்ட்டில் தேர்வு பெற்று இந்திய ஏ அணிக்காக ஆடி தற்போது இந்திய டி20 அணியிலும் இடம் பிடித்துவிட்டான்.

இந்திய அணியில் லெவனில் க்ருனால் ஆடவேண்டும். ஏனெனில் இந்திய அணியின் முதன்மை ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா என்பதில் மாற்றம் இல்லை. ஹர்திக் நெ.7லும் க்ருனால் நெ.8லிம் ஆடினால் சரியாக இருக்கும்

க்ருனால் பாண்டியா ஒரு பேட்டிங் ஆல் ரவுடன்டர், பேட்டிங் ஆல் ரவுண்டர் என்று சொல்லுவதை விட அவன் ஒரு சிறந்த பினிஷ்ர். மேலும் , அவன் மூலம் 6 பந்து வீச்சாளர்கள் நமக்கு கிடைப்பார். இதனால் இரண்டு பாண்டியக்களும் இந்திய டி20 லெவனில் இருக்க வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார் கிரண் மோர்.

 

இந்திய டி20 அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், க்ருனால் பாண்டியா, புவனேஸ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்திக் பாண்டியா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.

Editor:

This website uses cookies.