பண்ட் அதிரடியாக ஆடுவதெல்லாம் இருக்கட்டும்.. இதை செய்ய முடியுமா? – கேள்வி எழுப்பிய புஜாரா!

ரிஷப் பந்த் அதிரடியாக ஆடியதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்; அவர் வரும் போட்டிகளில் இதை நிச்சயம் செய்ய வேண்டுமென அறிவுரை கூறுகிறார் முன்னணி இந்திய வீரர் சித்தேஸ்வர் புஜாரா.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவதாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன்கள் எடுத்தது.

அதற்கு அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணிக்கு முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழக்க 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த புஜாரா மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் நீண்டநேரம் பேட்டிங் செய்து விக்கெட் இழக்காமல் அணியை நல்ல ஸ்கோர் எடுக்க உதவினர்.

புஜாரா ஒரு முனையில் நங்கூரம் போல நிலைத்து ஆடி வந்தாலும், மறுமுனையில் ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டியைப் போலவே தனது அதிரடியை வெளிப்படுத்தினார். அவர் 40 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதேபோல் புஜாராவும் அரைசதம் கடந்தார். துரதிஸ்டவசமாக புஜாரா 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ரிஷப் மீண்டும் தனது அதிரடியை வெளிப்படுத்தி வந்து 90 ரன்களை கடந்திருக்கையில் துரதிஸ்டவசமாக ஆட்டமிழந்து இம்முறையும் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இந்நிலையில் ஆட்டமிழந்த பிறகு ரிஷப் பந்த் ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்த புஜாரா,

“ரிஷப் பண்ட் இயல்பாகவே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் என அவருக்கு எதைக் குறித்தும் கவலை இல்லை. அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவருக்கு பலமாக இருக்கும். அதே நேரம் சரியான பந்தை தேர்வு செய்து அதற்கு ஏற்றார் போல் விளையாடுவது டெஸ்ட் போட்டியில் முக்கியத்துவம் வாய்ந்தது.

அதனை அவர் சரியாக செய்ய வேண்டும். அணிக்கு தேவையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது ஒரு வீரரின் செயலாகும். அடுத்தடுத்த போட்டிகளில் தனது தவறிலிருந்து அவர் கற்றுக் கொள்வார் என நான் நம்புகிறேன். களத்தில் எதிரிலிருக்கும் வீரருடன் நன்று பொறுமையாக பேசி விளையாடுவதை அவரிடம் நான் மீண்டும் எதிர்பார்க்கிறேன்.” என வெளிப்படையாக பேசியுள்ளார் புஜாரா.

 

Prabhu Soundar:

This website uses cookies.