ரிஷப் பண்ட் பொறுப்பான ஆட்டத்தை ஆட வேண்டும் – பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்

2019ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் இதுவரை எதிர்பார்த்த அளவிற்கு ஆடவில்லை. அவரை சில நேரங்களில் அணி நம்பியுள்ளது. இதனால் அவர் இன்னும் பொறுப்புடன் ஆட வேண்டும் என டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்

இந்திய அணிக்காக அண்டர் 19 உலக கோப்பையில் ஆடிய பிறகு, ஐபிஎல் தொடரின் மூலம் உலகிற்கு தனது அதிரடி காட்டி அறிமுகமானவர் ரிஷப் பண்ட். இவர் 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார். அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனாலும், ரிஷப் பண்ட் 684 ரன்கள் குவித்தார். இது 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

ஆனால் இந்த ஆண்டு ரிஷப் பண்ட் நன்றாக ஆடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

21 வயதான ரிஷப் பண்ட் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 27 பந்துகளுக்கு 78 ரன்கள் அடித்து அசத்தினார். அதன் பிறகு, தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் மிக மோசமான ரன்களை மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது. 25, 11, 39, 5 மற்றும் 18 இவை இவர் கடைசியாக நிறைய 5 போட்டிகளில் ரன்கள் ஆகும்.

இவரின் நிலை குறித்து பேசிய டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியதாவது, “ரிஷப் பண்ட் சற்று புரிந்து கொள்ளாமல் ஆடிவருகிறார். அணிக்கு அவரின் அதிரடி எந்த அளவிற்கு தேவை என்பதை அவர் இன்னும் சரிவர உணரவில்லை. நடு வரிசையில் இவரைப் போன்ற எளிதாக சிக்ஸர் அடிக்கும் வீரர்கள் சொதப்புவது, வெற்றியை தாமாக முன் வந்து எதிரணிக்கு கொடுப்பதற்கு சமம். வரும் போட்டிகளில் பொறுப்பான நிலையில் பண்ட் கட்டாயம் ஆட வேண்டும்”

Prabhu Soundar:

This website uses cookies.