விஜய் ஹசாரே கோப்பைப் போட்டி செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 25 வரை பெங்களூரு, ஜெய்ப்பூர், வதோதரா, டெஹ்ராடுன் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்கான தில்லி அணியில் இடம்பெற்றுள்ள ஷிகர் தவன், ரிஷப் பந்த், வேகப்பந்துவீச்சாளர் சைனி ஆகியோர் தாங்கள் விளையாடுதை உறுதி செய்துள்ளார்கள்.
அக்டோபர் 2 அன்று இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இதனால், இந்திய அணியின் முதன்மையான விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த், இப்போட்டியில் எவ்வளவு ஆட்டங்களில் விளையாடுவார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஷிகர் தவனும் சைனியும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்காததால் அவர்கள் முழுப்போட்டியிலும் பங்கேற்பார்கள்.
தவன், ரிஷப், சைனி ஆகியோர் தில்லி அணிக்காக விளையாடுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நேரம் கிடைக்கும்போது விராட் கோலியும் இஷாந்த் சர்மாவும் இப்போட்டியில் கலந்துகொள்வார்கள் என்று கூறியுள்ளார் தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் ரஜத் சர்மா.
விஜய் ஹசாரே டிராபிக்கான தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக் கேப்டனாகவும், விஜய் சங்கர் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி வருகிற 24-ந்தேதி தொடங்கி அக்டோபர் 10-ந்தேதி வரை நடக்கிறது.
இந்தத் தொடரில் தமிழ்நாடு அணி ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு அணியுடன் பெங்கால், பீகார், குஜாராத், ஜம்மு-காஷ்மீர், மத்திய பிரதேசம், ரெயில்வேஸ், ராஜஸ்தான், சர்வீசஸ் மற்றும் திரிபுரா அணிகள் உள்ளன.
இந்தத் தொடருக்கான தமிழ்நாடு அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. தினேஷ் கார்த்திக் (கேப்டன்), 2. விஜய் சங்கர் (துணைக்கேப்டன்), 3. அபிநவ் முகுந்த், 4. முரளி விஜய், 5. பாபா அபரஜித், 6. முருகன் அஸ்வின், 7. வாஷிங்டன் சுந்தர், 8. ஆர். சாய் கிஷோர், 9. என். ஜெகதீசன், 10. டி. நடராஜன், 11. கே. விக்னேஷ், 12. எம். முகமது, 13. எம். சித்தார்த், 14. அபிஷேக் தன்வார், 15. சி. ஹரி நிஷாந்த், 16. ஜே. கவுசிக்.