2022 ஐபிஎல் தொடரில் இந்த 5 அறிமுக வீரர்கள் வேற லெவல் மாஸ் செய்துவிட்டார்கள் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார் .
15வது ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில், இறுதி போட்டிக்கான இரண்டாவது அணியை தீர்மானிக்கும் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதின.
இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெங்களூர் அணியை மிகவும் எளிதாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதனால் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் 2022 ஐபிஎல் தொடரில் யார் தலைமையிலான அணி வெற்றி பெறும் என்று விருவிருப்பான விவாதம் நடைபெற்று வருகிறது. மேலும் 2022 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை முன்னாள் வீரர்கள் மற்றும் வல்லுநர்கள் பாராட்டியும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்த்தி பட்டேல் 2022 ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்ட 5 வீரர்கள் குறித்து பாராட்டி பேசியுள்ளார்.
1,திலக் வர்மா
நடப்பு ஐபிஎல் தொடரில் அறிமுகமான 19 வயது மட்டுமே ஆகும் திலக் வர்மா இந்த தொடரில் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.ரோஹித் சர்மா பாராட்டியது போல் திலக் வர்மா இந்திய அணியில் விளையாட தகுதியான வீரர் என்று பார்திவ் படெல் தெரிவித்துள்ளார்.