சௌரவ் கங்குலி மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகிய இரண்டு கேப்டன்களுக்கும் இடையேயான ஒப்பீடு காலம் காலமாக நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஒருவர் 2000ஆம் ஆண்டுகளில் இந்திய அணியை தூக்கி நிறுத்தியவர். ஒருவர் அதன் பின்னர் தலைமை ஏற்று பல கோப்பைகளை பெற்றுக் கொடுத்தவர். இருவருக்குமே இந்திய அணியை வழிநடத்திய இதில் மிகப் பெரும் பங்கு இருக்கிறது.
ஆனால் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த சிறந்த கேப்டனை தேர்வு செய்தும் ஒப்பீடுகளை விமர்சனங்களாக வைத்தும் வருகின்றனர் .இந்நிலையில் தோனி மற்றும் கங்குலி குறித்து பேசியுள்ளார் பார்த்தீவ் பட்டேல். இவர் கங்குலியின் தலைமையில் அறிமுகமாகி தோனியின் தலைமையில் ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்…
இரண்டுக்கு கேப்டனுக்குமிடையில் பெரிய போட்டி இருக்கிறது. ஒரு கேப்டனிடம் நிறைய கோப்பைகள் இருக்கிறது. மற்ற கேப்டனிடம் அந்த கோப்பையை வெல்லும் அணியை உருவாக்கி கொடுத்த திறமை இருக்கிறது. கேப்டனாக இந்திய அணிக்கு பொறுப்பேற்ற போது இந்திய அணி மிகவும் சிரமமான காலகட்டத்தில் இருந்தது.
வெளிநாடுகளிலும் போட்டிகளை வென்று கொடுத்தார். டோனியை பற்றி பேசினோம் ஆனால் அவர் நிறைய கோப்பையை வென்றுள்ளார் .அதிக கோப்பைகளை வென்ற ஒரு கேப்டன் இவர்தான். ஆனால் மிகச் சிறந்த கேப்டன் யார் என்று கேட்டால் அது கங்குலி தான் என்று கூறியுள்ளார் பார்த்தீவ் பட்டேல்.