பெங்கலூர் அணியின் தோல்விக்கு கோஹ்லி மட்டும் காரணமில்லை..ஆர்சிபி அணி வீரர் சப்போர்ட்!!

ஆர்சிபி அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்த்திவ் படேல் பெங்கலூர் அணியின் தோல்விக்கு விராட் கோலியை மட்டும் குற்றம் சொல்ல முடியாது என்று தனது ஆதரவை விராட் கோலிக்கு தெரிவித்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை 13 ஆண்டுகள் விளையாடி ஒருமுறைகூட டைட்டில் பட்டத்தை வென்றது கிடையாது. இது அந்த அணிக்கு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது.

2016இல் இறுதி சுற்று வரை முன்னேறி வெற்றி பெறாமல் அந்த வாய்ப்பை வீணடித்தது. அதே போன்று 2020 துபாய் அமீரகத்தில் நடந்த ஐபிஎல் போட்டி தொடரில் முதல் பாதியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு பின்னர் சிறப்பாக செயல்படாமல் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவற விட்டது.அந்த அணியில் பேட்டிங் மிகச்சிறப்பாக இருந்தபோதும் அந்த அனியின் பந்துவீச்சு சொல்லிகொள்ளும் அளவுக்கு இல்லை. சஹாலை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படவில்லை

இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டன் விராட் கோலி என்று பலரும் விராட் கோலியை சாடியுள்ளனர்.

இந்நிலையில் அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்த்திவ் படேல் கூறியதாவது ஆர்சிபி அணி மிகச்சிறந்த ஒரு அணி பேட்டிங், பவுலிங் ஃபீல்டிங் போன்ற அனைத்திலும் மிக சிறப்பாகவே உள்ளது. இருந்தபோதும் சில காரணங்களால் எங்கள் அணி இதுவரை டைட்டில் பட்டத்தை பெற முடியவில்லை.

ஆர்சிபி அணியின் தோல்விக்கு காரணம் விராட் கோலி என்று மட்டுமே சொல்ல முடியாது என்று அவர் கூறினார். மேலும் அவர் கூறியதாவது பெங்களூரு அணியின் தோல்விக்கு சக வீரர்களும் பொறுப்பில்லாத பந்துவீச்சும், அந்த அணியின் டைரக்டர் மற்றும் தலைமை கோச் மைக் ஹஸன் மற்றும் சைமன் காட்டிச் ஆகியவர்களும் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி அணி தோல்விக்கு விராட் கோலியை மட்டுமே காரணம் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்று தனது ஆதரவை விராட் கோலிக்கு தெரிவித்துள்ளார்

Mohamed:

This website uses cookies.