ஜோஸ் பட்லர் இனி டி20 போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்குவார் – இங்கிலாந்து பயிற்சியாளர்

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தில் பயிற்சியாளராக பொறுப்பில் இருந்த பால் பார்ப்ராஸ், பார்மில் உள்ள ஜோஸ் பட்லர் துவக்க வீரராக இனி களம் இறங்குவார் என தெரிவித்துள்ளார்.

ஐபில் போட்டிகளில்  ஆடி வந்த ஜோஸ் பட்லர், முதல் 5 போட்டிகளில் பின்னணி வீரராக களமிறங்கினார். அதில் அவர் பெரிதாக சோபிக்கவில்லை. அடுத்து கேப்டன் ரஹானே இவரை துவக்க வீரராக களமிறங்குமாறு பணித்தார். அதன் பின்பு எல்லாம் அதிரடி தான்.

பட்லரின் ஐபில் அதிரடி

துவக்க வீரராக களமிறங்கி அடுத்தடுத்து 5 அரைசதம் விளாசினார். 13 போட்டிகளை ஆடிய இவர் 548 ரன்கள் குவித்து அணியின் முன்னணி ரன் குவிப்பாளராக இருந்தார். இதன்மூலம் இவருக்கு மீண்டும் இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஆட வாய்ப்பு வந்தது.

இங்கிலாந்து அணியில் மீண்டும் பட்லர்

நீண்ட இடைவேளைக்கு பின்பு டெஸ்ட் அணியில் இடம்பெற்றார். தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரிலும் சிறப்பாக ஆடி தொடர் நாயகன் விருது பெற்றார். 5 வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழந்து தவித்த பொது நிதானமாக ஆடி சதம் விளாசி அணிக்கு வெற்றி தேடி தந்தார்.

துவக்க வீரராக பட்லர்

இப்படி நன்றாக ஆசிக்கொண்டிருக்கும் ஜோஸ் பட்லர் டி20 போட்டிகளில் 5வது அல்லது 6வது வீரராகவே களமிறங்குகிறார். இனி இவர் துவக்க வீறாரா களமிறங்குவதே சரி என பொறுப்பு பயிற்சியாளராக இருந்து வரும் பால் பார்ப்ராஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்று நடந்த ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் துவக்க வீரராக களம் இறக்கப்பட்ட பட்லர் அதிரடியாக ஆடி 30 பந்துகளில் 61 ரன்கள் விளாசி ஆட்டம் இழந்தார். இனி வரும் போட்டிகளிலும் இவர் துவக்க வீரராகவே களமிறக்க படுவார் என பயிற்சியாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பயிற்சியாளர் கருத்து

ஒவ்வொரு அணிக்கும் நல்ல துவக்கம் என்பது மிகவும் முக்கியம். முதல் 6 ஓவர்களில் 60 அல்லது 70 அடிக்க கூடிய வீரர்களை இறக்குவது தான் சரி. அப்படி ஒரு யோசனையில் தான் ஜோஸ் பட்லர் ஐபில் போட்டிகளில் ஆடியது நினைவுக்கு வந்தது இதனால் அவர் இறங்குவது சரி என பட்டது என்று இங்கிலாந்து அணியின் பொறுப்பு பயிற்சியாளர் கூறினார்.

Vignesh G:

This website uses cookies.