வங்கதேசம் மற்றும் நேபாள அணி மற்றும் இந்திய அண்டர்19 அணிகலுக்கு இடையிலான முத்தரபுதொடர் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி அரிவிக்கப்ட்டாது. இதில் கேப்டனாக பவ்ன் ஷா நியமிக்கப்ட்டார். இவருடைய ரோல் மாடன் தோனி தான் என்வும் கூறியுள்ளார்.
அதேபோல் சென்ற வருட நடர்19 அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிவம் மாவியும் கூறியுள்ளார்.
டெல்லி அருகே உள்ள நொய்டாவைச் சேர்ந்த ஷிவம் மாவி, கடந்த ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போதுதான் கவனம் பெற்றார்.
அப்போது, தொடர்ச்சியாக 140 கி.மீ. வேகத்தில் பந்து வீசிய ஷிவம் மாவி, வேகப்பந்து வீச்சுக்குப் பழக்கமான ஆஸ்திரேலிய வீரர்களையே திணறடித்தார்.
அதற்கு உடனடிப் பரிசாக, ஐ.பி.எல். போட்டித் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ரூ. 3 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார் இவர்.
ஆனால் ஷிவம் மாவியைப் பற்றிய ஓர் ஆச்சரியமான ரகசியம், இவர் பந்துவீச்சை விட மட்டைவீச்சில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது.
நொய்டாவில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் கிளப்பில் பயிற்சி பெற்றுவந்த ஷிவம், மட்டை பிடிப்பதிலேயே விருப்பம் காட்டினார்.
அதுகுறித்து, ‘‘நான் ஒரு பேட்ஸ்மேனாகத்தான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். ‘ஒன் டவுன்’ பேட்ஸ்மேனாக களம் இறங்குவேன். அந்நாட்களில் நான் பந்து வீச்சில் பெரிதாக ஈடுபாடு காட்டியதில்லை. வலைப்பயிற்சியின் போது சும்மா சிறிதுநேரம் பந்துவீசுவேன். அப்போது எனது பந்துவீச்சைக் கவனித்த பயிற்சியாளர் பூல்சந்த் சர்மா, பவுலிங்கில் அதிக கவனம் செலுத்துமாறு கூறினார். அதன்படி பந்து வீச வீச, எனது பந்துவீச்சுத் திறன் மேம்பட ஆரம்பித்தது. இப்படித்தான் நான் ஒரு பந்துவீச்சாளராக உருவாக ஆரம்பித்தேன்’’ என்கிறார்.
இப்போதும் தான் ஒரு பந்துவீச்சாளராக அறியப்பட்டாலும், பேட்டிங் செய்ய வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மகிழ்ச்சி அடைவதாகக் கூறுகிறார். அதிலும், பின்வரிசையில் இறங்குவதால் இஷ்டம் போல விளாசலாம் என்பது தனக்குப் பிடித்த விஷயம் என்கிறார்.
‘‘ஆமாம்… இப்போதும் பேட்டிங் எனக்குப் பிடித்த விஷயம். நான் பேட்டிங் செய்யக் களமிறங்கும்போது, என்னால் நன்றாக விளையாட முடிகிறது. அது எனக்குப் பிடித்தும் இருக்கிறது.’’
பிரெட் லீயின் பாராட்டு பற்றி…
பிரெட் லீயைப் போன்ற பிரபல வீரரின் பாராட்டு, ஷிவம் மாதிரியான இளம் வீரருக்கு உண்மையில் சுமையாகவே இருக்கும். ஆனால் அவர் அதுகுறித்து அலட்டிக்கொள்ளவில்லை…
‘‘பிரெட் லீயின் பாராட்டை நான் நெருக்கடியாகக் கருதவில்லை. இதுபோன்ற பாராட்டுகள் என்னை நல்லவிதமாகவே உணரவைக்கின்றன. அதேநேரம், நான் எனது பலவீனங்களைக் குறைக்க மேலும் அதிகமாக உழைக்க வேண்டும் என்பதையும் இது உணர்த்துகிறது. நான் நல்ல வேகத்தில் பந்து வீசலாம், ஆனால் அதன் நீள, அகலமும் சரியாக இருக்க வேண்டும்.’’
எந்தத் துறையில் சாதிக்க நினைப்பவருக்கும் ஒரு நல்ல குரு அமைவது வரம். தனக்கு அந்த வரம் ராகுல் டிராவிட் ரூபத்தில் அமைந்திருப்பதாகக் கூறுகிறார்.வ்