ஆசிய கோப்பைக்கான இளம் இந்திய படையை வழிநடத்துகிறார் பவன் ஷா
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்திய அணியின் கேப்டனாக பவன் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி, இலங்கையை துவம்சம் செய்து வெற்றியுடன் நாடு திரும்பியது.
இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் பவன் ஷா, இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் 282 ரன்கள் குவித்து சாதனைகள் பல படைத்ததன் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திருப்பினார்.
இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் எதிரொலியாக, விரைவில் துவங்க உள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்திய அணியின் கேப்டனாக பவன் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல் நான்கு நாடுகளுடனான கிரிக்கெட் தொடருக்கான இந்திய ஏ அணியின் கேப்டனாகவும் பவன் ஷாவே நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய பி அணியின் கேப்டனாக வேடாண்ட் முர்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி;
பவன் ஷா (கேப்டன்), தேவ்டட் படிகல், யாஸஸ்வி ஜெய்ஸ்வால், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), யாஸ் ரதோத், அயூஸ் பதோனி, நெஹால் வதேரா, பிராப் சிம்ரன் சிங், சித்தார்த் தேசாய், ஹர்ஸ் தியாகி, அஜய் தேவ் கவுட், யாடின் மன்கவானி, மோஹித் ஜங்க்ரா, சமீர் சவுத்திரி, ரஜேஷ் மோஹந்தி.
நான்கு நாடுகளுடனான கிரிக்கெட் தொடருக்கான இந்திய ஏ அணி;
பவன் ஷா (கேப்டன்), தேவ்டட் படிகல், யாஸஸ்வி ஜெய்ஸ்வால், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), யாஸ் ரதோத், அயூஸ் பதோனி, நெஹால் வதேரா, பிராப் சிம்ரன் சிங், சித்தார்த் தேசாய், ஹர்ஸ் தியாகி, அஜய் தேவ் கவுட், யாடின் மன்கவானி, மோஹித் ஜங்க்ரா, சமீர் சவுத்திரி, ரஜேஷ் மோஹந்தி.
இந்திய பி அணி;
வெண்டாட் முர்கார் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தாகூர் திலக் வர்மா, கும்ரான் இக்பால், வம்சி கிருஷ்ணா, பரதோஷ் ரன்ஞ்சன் பவுல், ரிஷப் சவுஹான், சித்தார்த் ரானா, சயான் பிஸ்வாஸ், ஷ்லப்ஹாங் ஹெட்ஜ், சமீப் ரிஷ்வி, பங்கஜ் யாதவ், ஆகாஷ் சிங், அசோக் சந்து, ஆயூஷ் சிங், நிதிஷ் ரெட்டி, சபீர் கான், சாஹில் ராஜ், ராஜ்வர்தன்.