சுனில் நரேன், டுவெய்ன் பிராவோ மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய வரிசையில் ஐபிஎல் தொடரில் மிகப்பெரும் சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ள டெல்லி கேப்டன் அணியில் நட்சத்திர ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல்.
ஐபிஎல் தொடரில் எப்பொழுதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களில் ஒருவரான டெல்லி கேப்பிடல் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல், 2014 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடினார்.
தான் அறிமுகமான ஐபிஎல் தொடரிலேயே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் காரணமாக 2015ஆம் ஆண்டு இந்திய அணிக்காகவும் தேர்வு செய்யப்பட்டார்.
தனக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் மிக சிறந்த முறையில் பயன்படுத்தி முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியில் நல்ல பாராட்டைப் பெற்ற அக்ஷர் பட்டேல், வருடங்கள் போக போக பேட்டிங்கிலும் மிக சிறப்பாக விளையாட துவங்கி, தலைசிறந்த ஆல்-ரவுண்டராக வலம் வரத்தொடங்கினார்.
இவருடைய வளர்ச்சியை கண்ட டெல்லி கேப்பிடல் அணி 2019ஆம் ஆண்டு இவரை தனது அணியில் இணைத்துக் கொண்டது, டெல்லி அணி இவர் மீது வைத்த நம்பிக்கையை வீணடிக்காமல், அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், இதனால் இவரை 2022 ஐபிஎல் தொடரிலும் டெல்லி அணி தக்க வைத்துக் கொண்டது.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்களை வீழ்த்தி ஐபிஎல் தொடர் 1000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்களை வீழ்த்திய வீரர் வரிசையில் 4வது இடத்தை பிடித்துள்ளார்.
முதல் மூன்று இடங்களில் டுவைன் பிராவோ சுனில் நரேன் மற்றும் ரவீந்திர ஜடேஜா இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.