பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
15வது ஐபிஎல் தொடரின் 28வது லீக் போட்டியான இன்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
காயம் காரணமாக இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் மாயன்க் அகர்வால் விளையாடாததால், ஷிகர் தவான் பஞ்சாப் அணியை இந்த போட்டியில் வழிநடத்துகிறார். மாயன்க் அகர்வாலுக்கு பதிலாக பிரப்சிம்ரன் சிங் என்னும் வீரர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி இந்த போட்டியில் எவ்வித மாற்றமும் இல்லாமல் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆடும் லெவன்;
ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங், ஜானி பாரிஸ்டோ, லியம் லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா, சாருக் கான், ஓடியன் ஸ்மித், காகிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அர்ஸ்தீப் சிங்.
ஹைதராபாத் அணியின் ஆடும் லெவன்;
அபிசேக் சர்மா, கேன் வில்லியம்சன், ராகுல் த்ரிபாட்டி, மார்கரம், நிக்கோலஸ் பூரன், சசான்க் சிங், ஜெகதீசா சுசித், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜென்சன், உம்ரான் மாலிக், நடராஜன்.