கங்குலி வார்த்தைக்கு மறு வார்த்தை பேசும் பாக். கிரிக்கெட் வாரிய தலைவர்!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஈசான் மணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள ஈசான் மணி ” ஆசியக் கோப்பை போட்டி, நட்பு நாடுகள் இடையே அவர்கள் நன்மைக்காக நடத்தப்படுவது. ஆசியாவில் கிரிக்கெட் விளையாடும் உறுப்பு நாடுகளின் நலனில் அக்கறைக் கொள்ளப்படும். இறுதி போட்டி அவர்களின் அனைவரின் ஆலோசனைக்கு பின்பே முடிவு செய்யப்படும்” என்றார்.

“The Asia Cup is organised for the benefit of the Associate Members. We will take a decision keeping that in mind. A final decision will be taken bearing in mind the interests of all the Asian countries. We have a few options,” Mani, the PCB chairman, told The Indian Express.

மேலும் தொடர்ந்த அவர் ” ஆசியக் கோப்பை செப்டம்பர் மாதம்தான் நடைபெற இருக்கிறது. அதற்குள் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துவிடும் என நம்புகிறேன். அப்படி இல்லையென்றால் அதற்கேற்றார்போல தயாராக இருக்க வேண்டும். ஈரானில் கொரோனா பாதிப்பு இருப்பதால் ஐக்கீய அரபு நாடுகளில் ஆசியக் கோப்பை தொடரை நடத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும். இது குறித்து துபாயில் மார்ச் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆசிய கிரிக்கெட் சங்க கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம்” என்றார் ஈசான் மணி.

Birmingham : Indian cricket captain Virat Kohli shakes hand with Pakistan’s Shadab Khan at the end of the ICC Champions Trophy match between India and Pakistan at Edgbaston in Birmingham, England, Sunday, June 4, 2017. AP/PTI(AP6_5_2017_000003B)

முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ” பாகிஸ்தானுடன் பொதுவான நாட்டில் விளையாடுவதில் இந்தியாவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எனவே துபாயில் நடக்க இருக்கும் ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானும் இந்தியாவும் நிச்சயம் விளையாடும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Sathish Kumar:

This website uses cookies.