பி.சி.சி.ஐ.,யிடம் 11 கோடி ரூபாயை அபராதமாக வழங்கியது பாகிஸ்தான் !!

பி.சி.சி.ஐ.,யிடம் 11 கோடி ரூபாயை அபாரமாக வழங்கியது பாகிஸ்தான்

இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரூ.11 கோடியை இழப்பீடாக வழங்கியுள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்வதால், அந்த நாட்டுடன் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நிறுத்தியது.

இதனால், ’இந்திய கிரிக்கெட் வாரியம், தங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, தொடரில் பங்கேற்காததால் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. நஷ்ட ஈடாக, தங்களுக்கு ரூ.481 கோடியை பிசிசிஐ வழங்க வேண்டும்’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின், தீர்ப்பாய கமிட்டியில் வழக்கு தொடர்ந்தது.

இதை விசாரித்த அந்த கமிட்டி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஏற்பட்ட வழக்கு உள்ளிட்ட செலவுகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி வழங்க வேண்டிய இழப்பீடு தொகை, 1.6 மில்லியன் டாலரை (ரூ.11 கோடி) இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வழங்கி விட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஷான் மணி நேற்று தெரிவித்தார்.

பாகிஸ்தானுடன் போட்டி வேண்டாம்; கம்பீர் காட்டம்;

ஐசிசி உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் விளையாட நேர்ந்தாலும் அதனை‌ விளையாடாமல் இருக்க இந்திய அணி தயாராகிக்கொள்ள வேண்டும் என கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து இந்தியா – பாகிஸ்தான் தொடர்கள் நடத்தப்படவில்லை. இருந்தாலும் ஆசியக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட தொடர்களில் இரு அணிகளும் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்நிலையில் புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானை இந்தியா பலவழிகளில் புறக்கணித்து வருகிறது.

அதன்படி பாகிஸ்தானுடன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடக்கூடாது என்ற கோரிக்கையும் அதிகரித்தது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த விராட் கோலி, நாடு என்ன செய்ய நினைக்கிறதோ, இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன முடிவு எடுக்கிறதோ, அதற்கு துணை நிற்போம். அரசு மற்றும் கிரிக்கெட் வாரியம் எடுக்கும் முடிவை மதிப்போம் என்று கூறினார்.

Mohamed:

This website uses cookies.