விராட் கோஹ்லியும் மனிதன் தான்.. மிஷின் கிடையாது; பயிற்சியாளர் காட்டம் !!

விராட் கோஹ்லியும் மனிதன் தான்.. மிஷின் கிடையாது; பயிற்சியாளர் காட்டம்

விராட் கோஹ்லி மிஷின் கிடையாது அவரது மனிதர் என்பதை ரசிகர்கள் சில சமயம் மறந்துவிடுகிறார்கள் என விராட் கோஹ்லியின் சிறுவயது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் கிங்காக திகழ்ந்தாலும், ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து சொதப்பியே வருகிறார்.

விராட் கோஹ்லியின் தலைமையின் கீழ் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஒவ்வொரு தொடரில் படுதோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஐபிஎல் தொடரின் போது விமர்ச்சனத்திற்கு ஆளாகி வரும் விராட் கோஹ்லி, இந்த தொடரிலும் கடும் விமர்ச்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.

இந்நிலையில், விராட் கோஹ்லியின் தடுமாற்றம் குறித்து பேசிய கோஹ்லியின் சிறு வயது பயிற்சியாளர் ராஜ் குமார், கோஹ்லியும் சாதரண மனிதர் தான் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது;

மைதானத்தில் உங்களுக்கு நல்ல நாட்களும் இருக்கும், மோசமான நாட்களும் இருக்கும். இது ஒவ்வொரு விளையாட்டு வீரனின் வாழ்க்கையிலும் ஒரு பகுதி. கோஹ்லி ஒரு மனிதர் தான்.. அவர் ஒன்றும் மெஷின் அல்ல… என்பதை ரசிகர்கள் மறந்து விடுகின்றனர்.

 

நீங்கள் மைதானத்திற்குள் நுழையும் ஒவ்வொரு நேரமும் வெற்றியடையமாட்டீர்கள். கோலி தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதை அவரது ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். தற்போது அவர் ஒரே ஒரு போட்டியில் மோசமாக விளையாடினாலும் அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி விடுகிறது” என்றார்.

Mohamed:

This website uses cookies.