ஐபிஎல் போட்டியில் மிகவும் குறைவான மதிப்பில் ஏலத்தில் எடுக்கப்பட்ட 3 சிறந்த வீரர்கள்
கிரிக்கெட் போட்டிகளில் அதிக பணம் கொடுத்து நடத்தும் போட்டியாக ஐபிஎல் தொடர் காணப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடர் உலகளவில் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் தொடர் அடுத்த சில தினங்களில் துவங்க உள்ள நிலையில், ஐ.பி.எல் வரலாற்றில் மிக குறைந்த விலைக்கு விலை போன மூன்று சிறந்த வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
#1 மாயக் மார்க்கண்டே.
மாயக் மார்க்கண்டு ஒரு லெக் ஸ்பின்னர். 2018 IPL லில் மும்பை இந்தியன்ஸ் அணி மார்க்கண்டேய வை 20 லட்சம் ஏலத்தில் தனது அணிக்காக எடுத்துக்கொண்டது . இவர் அந்த வருடம் 14 போட்டிகளில் பங்கேற்று 15 விக்கெட்டுகளை எடுத்தார். மேலும் அந்த அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தார.
அவரின் இந்த சிறப்பாக ஆட்டத்தால் 2019 பிப்ரவரியில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது ஆனால் அதில் அவர் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.
#2 ராகுல் திருப்பதி.
2017 ஐபிஎல் தொடரில் அறிமுகமான ராகுல் ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். இவர் அறிமுகமான காலகட்டத்தில் ரசிகர்கள் அனைவரையும் வியக்க வைத்தவர் அந்தளவு அவருடைய பேட்டி அனைவரையும் கவர்ந்தது.
ஆனால் 2017 இன் ரைசிங் புனே அணி இவரை 10 லட்சம் குறைந்த ஏலத்திற்கு தனது அணிக்காக தேர்ந்தெடுத்தது. இவர் அந்த ஆண்டு 14 போட்டிகளில் பங்கேற்று 391 ரன்கள் எடுத்தார் இவர் அந்த ஆண்டு அதிகமான ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தார்.
இவருடைய ஆவரேஜ் 27. 92 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 146.44. மேலும் இரண்டு அரை சதங்களும் அடித்துள்ளார் ஆனால் அடுத்து விளையாட்டு 2 ஐபிஎல் சீசன்களிலும் இவர் பெரிதளவு சோபிக்கவில்லை.
இருந்தபோதும் ராஜஸ்தான் அணிக்காக 3.40 கோடி ஒப்பந்தத்தில் தேர்வு ஆக்கப்பட்டார். வரும் 2020ல் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி இவரை 60 லட்சம் ஏலத்திற்கு தனது அணிக்காக தேர்ந்தெடுத்துக் கொண்டது.
#3 ஷ்ரேயஸ் கோபால்.
ஆல்-ரவுண்டராக ஷ்ரேயஸ் கோபால் 2014 முதல் 2017 வரை மும்பை இந்திய அணிக்காக விளையாண்டார் பின் 2018 இல் ராஜஸ்தான் ராயல் அணி 20 லட்சம் ஏலத்திற்கு கோபாலை தனது அணிக்காக தேர்ந்தெடுத்தது.
2019 இல் கோபால் 14 போட்டிகளில் பங்கேற்று 20 விக்கெட்களை வீழ்த்தினார். அந்த ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியவர் இவரே,
மேலும் அந்த சீசனில் அதிகமான விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் கோபால் நான்காவது இடம்பெற்றார். மேலும் ஆர் சி பி க்கு எதிரான போட்டியில் விராட் கோலி,ab டிவில்லியர்ஸ் மற்றும் மார்க்க ஸ்டாய்நிஸ் ஆகிய மூவரையும் ஹாட்ரிக் முறையில் வீழ்த்தினார் இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.