இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வங்கதேச அணி இரண்டாம் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதி வரும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தா மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 106 ரன்களுக்கு சுருண்டது. இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை இழந்து 347 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 132 ரன்கள் எடுத்தார். இவர் டெஸ்ட் அரங்கில் 27 வது சதத்தை பூர்த்தி செய்தார். ரகானே 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புஜாரா 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியாக, இந்திய அணி வங்கதேச அணியை விட 241 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்திய அணி டிக்ளேர் செய்து பிறகு 2வது இன்னிங்சை தொடர்ந்த வங்கதேச அணிக்கு துவக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்து மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. துவக்க வீரர்கள் 4 பேரும் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த மூத்த வீரர்களான ரஹீம் மற்றும் மகமதுல்லா இருவரும் சரிவில் இருந்து மீட்டு சற்று நல்ல ஸ்கோரை எட்டுவதற்கு நிலைத்து ஆடி வந்தனர்.
இதற்கிடையில் காயம் காரணமாக மகமதுல்லா ரிட்டயர் ஹர்ட் ஆனார். மறுமுனையில் ரஹீம் நிலைத்து ஆடினாலும் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இரண்டாம் நாள் முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்திருந்தது.
இதன் மூலம் இந்திய அணியை விட 89 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இஷாந்த் சர்மா, இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வங்கதேச அணிக்கு ரஹீம் 59 ரன்களுடன் களத்தில் உள்ளார்.