டெஸ்டுன்னு வந்துட்டாலே நான் பர்பார்மன்ஸ் பண்ணுவேன்… இன்டர்நெஷனல் பிட்ச் எனக்கு செட் ஆகாதுன்னு யார் சொன்னா? – அஸ்வின் அசத்தல் பேச்சு!

“சர்வதேச டெஸ்டில் பல வருடங்களாக விளையாடி வருவதால் வெளிநாடுகளில் உள்ள பிட்ச் கண்டிஷன் எப்படி இருக்கும் என்பதை நன்கு உணர்ந்து, அதற்கு ஏற்றவாறு பௌலிங் செய்ய நுணுக்கங்கள் வைத்துக்கொள்ள வேண்டும். வெளி மைதானங்களில் எனக்கு செட் ஆகாது என்று எந்த வகையில் கூறுகிறீர்கள்?.” என ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய பின் பேட்டியளித்த ரவிசந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்த முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்தபின் பேட்டி கொடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில், “சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என்று நினைக்கிறேன். துவக்கத்தில் இந்த பிட்ச்சில் ஈரப்பதம் காணப்பட்டது. பின்னர் பந்து நன்றாக ஸ்பின் ஆனது. பிட்ச்சின் மேற்பரப்பு நன்கு வறண்டு காணப்பட்டதால், அதற்கேற்றவாறு வேகத்தை மாற்றிமாற்றி பயன்படுத்த வேண்டும் என்று உணர்ந்து கொண்டேன். அதேபோல் டிவியில் பார்த்த போதும் பந்து லேட்டாக ஸ்பின் ஆனது.

சர்வதேச கிரிக்கெட் என்றாலே ஒவ்வொரு பிட்ச்சிலும் எப்படி செயல்பட வேண்டும்? எந்த வகையில் மாற்றங்களை கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும்? என்பதை உணர்ந்து விளையாட வேண்டும். பந்துவீச வேண்டும். அதை நான் செய்தேன். நன்றாக எடுபட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

பல வருடங்களாக சர்வதேச டெஸ்டில் விளையாடி வருவதால் பிட்ச்சின் கண்டிஷனை விரைவாக உணர்ந்து அதற்கேற்றவாறு பந்துவீச முடிகிறது. வெளி மைதானங்களில் நான் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை என்று எதை வைத்துக் கூறுகிறார்கள்? எல்லா அணிகளிலும் ஆப்-ஸ்பின்னர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஆட்டத்தை விரைவில் வெளிப்படுத்த உள்ளார். அதை நாம் காண்போம். கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டு அடுத்தடுத்த உயரங்களுக்கு செல்ல வேண்டும். இளம் வயதில் இருக்கும் இவர் விரைவாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி பலரின் கவனத்தையும் சர்வதேச கிரிக்கெட்டிலும் ஈர்ப்பார் என்று நம்புகிறேன்.” என அஸ்வின் தன்னுடைய பேட்டையில் பகிர்ந்து கொண்டார்.

Mohamed:

This website uses cookies.