கொல்கத்தா அணியுடனான இன்றைய போட்டிக்கான பெங்களூர் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
பெங்களூர் அணி இதுவரை ஆடிய 9 போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று 3ம் இடத்தில் உள்ள நிலையில், கேகேஆர் அணி 9 போட்டிகளில் ஐந்து வெற்றிகளுடன் 10 புள்ளிகளை பெற்று 4ம் இடத்தில் உள்ளது.
பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய இன்னும் ஒருசில வெற்றிகளை மட்டுமே இந்த 2 அணிகளும் எதிர்நோக்கியிருந்தாலும் கூட, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தொடர் வெற்றிகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பை தொடர்ந்து தக்கவைத்து வருவதால், ஆர்சிபி மற்றும் கேகேஆர் ஆகிய இரு அணிகளுக்குமே இன்றைய போட்டி மிக முக்கியமானது.
இன்றைய போட்டிக்காக இரு அணி ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இன்றைய போட்டிக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
இன்றைய போட்டிக்கான பெங்களூர் அணியை பொறுத்தவரையில் எந்த மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. துவக்க வீரரான ஆரோன் பின்ச் தொடர்ந்து சொதப்பி வந்தாலும் அவருக்கான வாய்ப்பு இன்றும் மறுக்கப்படாது என்றே தெரிகிறது.
பெங்களூர் அணியின் பந்துவீச்சில் சில பின்னடைவுகள் இருந்தாலும், கடந்த போட்டியில் விளையாடிய அதே பந்துவீச்சாளர்களுக்கே இன்றைய போட்டியிலும் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய் போட்டிக்கான பெங்களூர் அணியின் உத்தேச ஆடும் லெவன்;
ஆரோன் ஃபின்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ், குர்கீரத் சிங் மன், வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், ஷாபாஸ் அகமது, இசுரு உடானா, நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல்.