ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொலார்ட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் பொலார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
அபுதாபியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் கீரன் பொலார்ட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
காயம் காரணமாக இன்றைய போட்டியிலும் ரோஹித் சர்மா விளையாடாததால், கீரன் பொலார்டே இன்றைய போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்த உள்ளார்.
இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. கவுட்டர் நைல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜேம்ஸ் பட்டின்சன் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதே வேளையில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எவ்வித மாற்றமுமின்றி இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.
இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணி;
குவிண்டன் டிகாக் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சவரப் திவாரி, ஹர்திக் பாண்டியா, கீரன் பொலார்டு (கேப்டன்), க்ரூணல் பாண்டியா, ஜேம்ஸ் பட்டின்சன், ராகுல் சாஹர், டிரண்ட் பவுல்ட், ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.
இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி;
ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜாஸ் பட்லர், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), ரியான் ப்ராக், ராகுல் திவாடியா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயஸ் கோபால், அன்கித் ராஜ்புட், கார்த்திக் தியாகி.