ரகானே அல்லது ராகுலை நெ.4ல் ஆடுங்கள் – திலீப் வெங்கசர்கார்

இங்கிலாந்து – இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இங்கிலாந்து 2-1 என வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும், அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது.

ஒருநாள் கிரிக்கெட் அணியில் தொடக்க வீரர்களான தவான், ரோகித் சர்மா மற்றும் 3-வது வீரராக களம் இறங்கும் விராட் கோலி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இவர்கள் சொதப்பினால் ஒட்டு மொத்தமாக அணி சொதப்பி விடுகிறது. 4-வது இடத்திற்கு சரியான நபரை இந்திய அணி இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

இதனால் இந்தியா தோல்வியடைந்து வருகிறது. இப்படி சென்றால் உலகக்கோப்பையில் இந்தியா கோப்பையை வெல்வது கடினமாகிவிடும். 4-வது இடத்திற்கு ரகானே அல்லது கேஎல் ராகுலை தயார் செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரர் கங்குலி விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தேர்வளாரும் ஆன திலிப் வெங்சர்காரும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து திலிப் வெங்சர்கார் கூறுகையில் ‘‘நம்பர் 3 மற்றும் 4 ஒருநாள் கிரிக்கெட்டில் முக்கியமான இடம். நம்பர் 4 இடத்திற்கு சரியான நபர் கிடைக்கவில்லை என்பது மோசமான தேர்வை காட்டுகிறது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரகானே அல்லது கேஎல் ராகுலை அந்த இடத்திற்கான வாய்ப்பில் இருந்து நீங்கள் எப்படி தவிர்க்க முடியும்?.

CARDIFF, WALES – JULY 06: Lokesh Rahul of India leaves the field after being bowled by Liam Plunkett of England during the 2nd Vitality International T20 match between England and India

 

ஒருநாள் போட்டிக்கு ரகானே தகுதி பெற முடியாது என்றால், அங்கு உங்கள் கண்ணை விட வேறு ஏதோ அங்கிருக்கிறது என்பதுதான் அர்த்தம். ஆப்கானிஸ்தானிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிறகு ஒருநாள் போட்டியில் இருந்து அவர் எப்படி நீக்க முடியும்?.

இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரகானே மீது நீங்கள் எப்படி நம்பிக்கை வைக்க முடியாமல் போனது?. நீங்கள் மியூசிக் சேர் ஆட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தால் பின்னர், டாப் வீரர்களின் நம்பிக்கை சீர்குலைக்கப்படும். இது வருங்காலத்திற்கு நல்லதல்ல. கேஎல் ராகுலை 4வது இடத்தில் நிலையாக களம் இறக்காதது, அவரை போன்ற குவாலிட்டி பேட்ஸ்மேன்களுக்கு நல்லதல்ல’’ என்றார்.

Editor:

This website uses cookies.