சென்னை அணியின் கலாச்சாரம் இதுதான்; சென்னை அணியின் விளக்கமளித்த ஆகாஷ் சோப்ரா !!

பிரபல கிரிக்கெட் ஆலோசகரான ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் சென்னை அணி தேர்ந்தெடுத்துள்ள வீரர்கள் குறித்து பேசியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை மொத்த 14 சீசன்கள் நிறைவஇந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை மொத்த 14 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.



இந்த 15வது சீசனுக்கான ஐபிஎல் ஏலம் ஏப்ரல் 12 மற்றும் 13 ஆகிய இரு தினங்களில் பெங்களூருவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது

இந்த மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த தொகைக்குள் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுத்து கொண்டனர். விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்ற இந்த ஏலத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 25 வீரர்களை ஏலத்தில் எடுத்தது.

இந்த நிலையில் சென்னை அணி தேர்ந்தெடுத்துள்ள வீரர்கள் பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர் பலரும் சென்னை அணியை அப்பாக்களின் அணி அல்லது தாத்தாக்களின் அணி(வயதானவர்களின் அணி) என்று விமர்சிக்கிறார்கள் ஆனால் உண்மையில் சென்னை அணி அப்படி கிடையாது சென்னை அணிக்கு என தனி யுக்தி உள்ளது, மற்ற அணி போல் புதிய மற்றும் திறமையான வீரர்களை தனது அணியில் இணைக்க வேண்டும் என்று சென்னை அணி திட்டமிடாது, அதற்கு பதில் தனது அணியில் ஏற்கனவே விளையாடிய வீரர்களை வைத்து விளையாட வேண்டும் என்று அணியில் விளையாடிய பழைய வீரர்களை மறுபடியும் தேர்வு செய்யும், சென்னையில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் குறிப்பாக மகேந்திர சிங் தோனியின் அறிவுரையின்படி தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னை அணியில் இருக்கும் வீரர்கள் மற்ற அணியில் விளையாடுவதற்கு ஆசைப்பட மாட்டார்கள் என்று ஆகாஷ் சோப்ரா பேசியிருந்தார்.

மேலும் சென்னை அணியின் உள்ள பலவீனம் குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா சென்னை அணியில் தற்போது இருக்கும் ஒரே பலஹீனம் அந்த அணி ஜோஸ் ஹசல்வுட் என்ற வேகப்பந்து வீச்சாளரை இழந்தது தான், ஆனால் இதையும் தோனி சரி செய்துவிடுவார் என்று ஆகாஷ் சோப்ரா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.