கங்குலியின் வார்த்தையை மீறி முடிவெடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்! கடுப்பாக போகும் இந்திய வீரர்கள்!
இந்திய அணி இந்த டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட மிகப்பெரிய தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது தான். கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு சென்றாலும் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்த பட்ட பின்னர்தான் பொதுவெளியில் அனுமதிக்கப்படுவார்கள்.
இதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகமும் பின்பற்றுகிறது. இந்திய அணி மொத்தமாக ஆஸ்திரேலியா செல்லும் போது ஆஸ்திரேலியாவில் தனி ஹோட்டல் அறையில் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்படுவார்கள். பயிற்சியும் செய்ய முடியாது, வெளியில் சென்று எந்த வேலையும் செய்ய முடியாது.
இது குறித்து சௌரவ் கங்குலி ஏற்கனவே ஒரு கருத்து தெரிவித்திருந்தார். அதாவது இரண்டு வாரங்கள் வீரர்களால் தனிமையில் ஹோட்டல் அறைக்கு உள்ளே இருக்க முடியாது. அவர்களுக்கு புத்துணர்ச்சி தேவை. மனவுளைச்சல் வந்துவிடும். போர் அடித்துவிடும். இதன் காரணமாக அந்த காலகட்டத்தை குறைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நிக் ஹாக்லி கூறியுள்ளதாவது. இரண்டு வார தனிமைப்படுத்தல் என்பது ஏற்கனவே நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு முடிவாகும். இதனையும் முடியாது தனிமைப்படுத்தப்படும் சூழல் மிகவும் நன்றாக இருக்கும்படி தயாராக வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறோம்.
ஹோட்டல் அறைகளும் வீரர்கள் தங்கியிருக்கும் இடமும் எந்த பிரச்சனை இல்லாமலும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதன்காரணமாக சௌரவ் கங்குலி கொடுத்திருந்த ஆலோசனைகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொள்ள மறுத்து உள்ளதாக தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இந்திய வீரர்களும் சவுரவ் கங்குலியும் எவ்வாறு செய்கிறார்கள் என்று.