ஆஸ்திரேலியாவில் விளையாடுவது அவ்வளவு சுழபமல்ல்: ஆடம் கில்கிரிஸ்ட்

ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெறவேண்டும் என்றால் கேப்டன் விராட் கோலிக்கு, மற்ற வீரர்களின் ஆதரவும் இருக்கவேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறினார்.

இதுகுறித்து சிட்னியில் அவர் நேற்று கூறும்போது, “இந்திய அணி டி20 தொடரை சிறப்பாக விளையாடி சமன் செய் துள்ளது. இதைத் தொடர்ந்து அடிலெய்டில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.

டெஸ்ட் போட்டியானது, டி20 போட்டியிலிருந்து வித்தியாசமானதாகும். 2014-ல் நடைபெற்ற தொடரைப் போலவே இந்தத் தொடரிலும் விராட் கோலி சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கிறேன். அவர் சிறப்பாக விளையாடாவிட்டால்தான் ஆச்சர்யம். அவர் மிகத் திறமையான பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் விராட் கோலி மட்டுமே விளை யாடினால் போதாது. மற்ற வீரர்களின் துணையும் அவருக்கு இருக்கவேண்டும். அப்போதுதான் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவில் வெல்ல முடியும்.

ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது சுலபம் அல்ல என்பதை விராட் கோலி உணர்ந்திருப்பார். மற்ற வீரர்கள் விராட் கோலிக்கு துணை நின்றால் அணிக்கு வெற்றி நிச்சயம்” என்றார்.

Rajeshwaran Naveen: Cricket Fan - Dhoni Lover - CSK Forever

This website uses cookies.