டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதிய பாயிண்ட் சிஸ்டம் அறிவிப்பு!!

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பாயிண்ட் சிஸ்டம் அறிவிப்பு!!

ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிந்த உடன் அடுத்ததாக பெரியதாக ஒரு தொடர் புதிதாக துவங்கப்பட உள்ளது. அதுதான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகும்.

முன்னர் போல தரவரிசையில் நெ.1 அணிக்கு சாம்பியன்ஸ் பட்டத்தை கொடுக்காமல் இந்த முறையில் இருந்து இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கோப்பையை வெல்லும் அணிக்கே முதலிடம், மற்றும் சாம்பியன் பட்டம் கிடைக்கும்.

முதன்முறையாக நடத்தப்படவுள்ள இந்த உலக டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 9 அணிகள் மோதுகின்றன. வரும் 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15-ஆம் நாள் தொடங்கும் டெஸ்ட் தொடர் ஆனது 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகின்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின்  இறுதிப்போட்டி 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்கான புள்ளிப்பட்டியலும் மற்றப்பட்டுள்ளது. மொத்தம் உள்நாட்டில் மூன்று தொடர் வெளிநாட்டில் மூன்று தொடர் நடக்கும். இதன் 6 தொடரில் கிடைக்கும் புள்ளிகளை வெற்றிகளையும் வைத்து இறுதியாக இரு அணிகள் டாப்-2ல் இருக்கும் அந்த அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் மோதும். இதில் வெல்லும் அணிக்கு சாம்பியன் பட்டம் கொடுக்கப்படும்.

மூன்று ஆண்டுகளாக நடத்தப்படும் டெஸ்ட் தொடரில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும் என ICC அறிவித்துள்ளது.

ICC தெரிவித்துள்ளதன் படி, டெஸ்ட் தரவரிசையில் முதல் 9 இடங்களில் உள்ள அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் தொடர்ச்சியாக இந்த அணிகள் 6 தொடர்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் விளையாடும்.

மொத்தம் ஒவ்வொரு அணிக்கும் ஆறு தொடர்கள் இருக்கும். இதில் ஒவ்வொரு தொடருக்கு மொத்தம் 120 புள்ளிகள் வழங்கப்படும். 6 தொடருக்கு 720 புள்ளிகள்.

ஒரு தொடரில் 5 போட்டிகள் இருந்தாலும் சரி, 4 போட்டிகள், 3 போட்டிகளில் இருந்தாலும் சரி மொத்தம் ஒரு தொடருக்கு 120 புள்ளிகள் ஆகும்.

இந்த புதுய முறையை ஐசிசி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

தொடரில் ஒரு போட்டி ட்ராவில் முடிந்தால் ஒவ்வொரு அணியின் தலா 30% போட்டி புள்ளிகளை பகிர்ந்து கொள்ளும் போட்டி டையில் முடிந்து முடிவில்லால் போனால் போட்டிக்கு வைக்கப்பட்ட புள்ளிகள் சரிசமமாக பகிர்ந்து அளிக்கப்படும்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான புதிய முறை புள்ளி கணக்கிடல் :

6 தொடருக்கு 720 புள்ளிகள்
ஒரு தொடருக்கு 120 புள்ளிகள்

5 போட்டிகளில் கொண்ட ஒரு தொடரில் – ஒரு போட்டிக்கு 24 புள்ளிகள் வழங்கப்படும். ட்ரா ஆனால், 24 புள்ளியோல் 30% வழங்கப்படும். அதாவது 8 புள்ளிகள்.

4 போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் – ஒரு போட்டிக்கு 30 புள்ளிகள் வழங்கப்படும். ட்ரா ஆனால் 30% அதாவது, 10 புள்ளிகள் வழங்கப்படும்.

3 போட்டிகள் கொண்ட தொடரில் – ஓரி போட்டிக்கு 40 புள்ளிகள் – ட்ராவிற்கு 13.33 புள்ளிகள்

இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டிக்கு 60 புள்ளிகள் – ட்ராவிற்கு 20 புள்ளிகள்.

Editor:

This website uses cookies.