இவருக்கு ஏண்டா இவ்வளவு போட்டி… நிக்கோலஸ் பூரணை 16 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது லக்னோ அணி !!

இவருக்கு ஏண்டா இவ்வளவு போட்டி… நிக்கோலஸ் பூரணை 16 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது லக்னோ அணி

விண்டீஸ் அணியின் நடத்திர வீரரான நிக்கோலஸ் பூரணை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 16 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவை பெற்றுள்ள ஐபிஎல் தொடரில் இதுவரை 15 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. அடுத்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் வழக்கம் போல் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தொடருக்கான மினி ஏலம் இன்று நடைபெற்று வருகிறது.

வழக்கம் போல் இந்த வருடத்திற்கான ஏலத்திலும் ஆல் ரவுண்டர்களுக்கே கடும் போட்டி நிலவி வருகிறது. சாம் கர்ரான், பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு அடுத்தபடியாக விண்டீஸ் அணியின் நட்சத்திர வீரரான நிக்கோலஸ் பூரணிற்கும் கடும் போட்டி நிலவியது.

2 கோடி ரூபாயை தனது அடிப்படை விலையாக நிர்ணயித்திருந்த நிக்கோலஸ் பூரணை எடுக்க பல அணிகளும் முனைப்பு காட்டியது. ஆனால் லக்னோ அணி விடாப்பிடியாக இருந்ததால் இறுதியாக நிக்கோலஸ் பூரணை 16 கோடி ரூபாய்க்கு லக்னோ அணியே ஏலத்தில் எடுத்துள்ளது.

நிக்கோலஸ் பூரண் சிறந்த வீரராக இருந்தாலும், ஐபிஎல் தொடரில் அவரது செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. கடந்த தொடரில் நிக்கோலஸ் பூரன் பல போட்டிகளில் அதிரடியாக விளையாடி 14 போட்டிகளில் 306 ரன்கள் எடுத்திருந்தாலும், 2021ம் ஆண்டு தொடரில் 12 போட்டிகளில் விளையாடி அதில் வெறும் 85 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

 

Mohamed:

This website uses cookies.