மும்பை அணிக்கு பயிற்சியாளராக விரும்புகிறேன் – ரமேஷ் பவார்
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் பவார் மும்பை கிரிக்கட் அசோசியேஷனின் அணியின் பயிச்சியாளராக விரும்புதாக கூறியுள்ளார். மும்பை அணி சமீப காலமாக உள்ளூர் போட்டிகளான ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை, சையத் முஸ்தாக் அலி கோப்பை போன்றவற்றில் சரியாக செயல்படவில்லை.
40 முறை ரஞ்சி கோப்பை தொடரை வென்ற மும்பை அணி கடந்த 3 வருடங்களாக நாக்-அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை. மேலும், இதனால் தியோதர் கோப்பையில் ஆடும் வாய்ப்பினை கூட பெறவில்லை.
இதனால் மும்பை அணி வீரர்கள் மற்றும் நிர்வாகத்தில் குறை இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சென்ற வருடம் மும்பை அணிக்கு பயிச்சியாளராக நியமிக்கப்ட்ட முன்னால் இந்திய வீரர் ஷமீர் திகே தனது பதவியில் இருந்து விலகினார்.
தற்போது அந்த பயிச்சியாளர் பதவிக்கு பல முன்னாள் இந்திய வீரர்கள் போட்டி போட உள்ளனர். இதே பதவியில் முன்னாள் இந்திய வீரரும் சுழற்பந்து வீச்சாளரும், மும்பை வீரருமான ரமேஷ் பவார் வர விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் கடந்த ஒரு வருடமாக மும்பை அணிக்கு சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்தார் பவார். தற்போது அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டார். மேலும், பயிச்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார் ரமேஷ்.
கடந்த பல ஆண்டுகளாக மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பை தொடரில் ஆடியவர் ரமேஷ் பவார். இது குறித்து அவர் கூறியதாவது,
நான் மும்பை அணியுடன் பல ஆண்டுகாலம் இருந்துள்ளேன். தற்போது கடந்த ஒரு வருடமகா சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்தேன். அப்போது மும்பை அணியில் என்னென்ன குறை உள்ளது என்பதை கற்றுக்கொண்டேன். அந்த குறைகளை என்னால் சரி செய்ய முடியும். மேலும், சரி செய்து அணியை மீண்டும் வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும்.
மும்பை அணி எனக்கு நிறைய கொடுத்துள்ளது. அந்த அணிக்கு நான் திரும்ப ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.
என கூறினார் ரமேஷ் பவார்.
தற்போது ஆஸ்திரேலியா அண்டர்-23 வீரர்களுக்கு சுழற்பந்து வீச்சு பயிற்சி அளிக்கும் பணி நிமித்தமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார் பவார்.