தென்னாப்பிரிக்க-போர்ட் பிரசிடென்ட் லெவன் அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
இதற்கு முன் தென்ஆப்பிரிக்கா – இந்தியன் போர்டு பிரசிடென்ட் லெவன் அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் கடந்த 26-ந்தேதியில் இருந்து நேற்று வரை நடைபெற்றது.
இந்தியாவுடன் டெஸ்ட் தொடரில் மோதுவதற்கு தயாராகும் வகையில் தென்னாப்பிரிக்க அணி, ரோஹித் சர்மா தலைமையிலான போர்ட் பிரசிடென்ட் லெவன் அணியுடன் விஜயநகரத்தில் நடைபெற்ற 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் மோதியது.
வியாழக்கிழமை முதல்நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 64 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 279 ரன்களை எடுத்தது.
கேப்டன் எய்டன் மார்க்ரம் 2 சிக்ஸர், 18 பவுண்டரியுடன் 100 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தார். டெம்பா பவுமா 87, வெர்னான் பிலாண்டர் 48 ரன்களை சேர்த்தனர். போர்ட் பிரசிடென்ட் லெவன் தரப்பில் தர்மேந்திர சிங் யாதவ் 3-66 விக்கெட்டுகளை சாய்த்தார்.
முதல்நாள் ஆட்டம் முழுவதும் மழையால் தடைபட்டது, 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் தென்ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது. அந்த அணி மார்கிராம் (100), பவுமா (87), பிலாண்டர் (48) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கட் இழப்பிற்கு 279 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
பின்னர் ஆடிய போர்ட் பிரசிடென்ட் லெவன் அணி தரப்பில் கேப்டன் ரோஹித் சர்மா டக் அவுட்டானார். மயங்க் அகர்வால் 39, பிரியங்க் பஞ்சால் 60, ஸ்ரீகர் பரத் 71, சித்தேஷ் லேட் 52 ரன்களை எடுத்தனர். இறுதியில் 64 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்களை எடுத்தது போர்ட் அணி.
தென்னாப்பிரிக்க தரப்பில் கேசவ் மகாராஜ் 3-35, வெர்னா பிலாண்டர் 2-27 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இறுதியில் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.