மும்பை, டெல்லி இல்லை; ஐபிஎல் கோப்பையை இந்த அணி தான் வெல்லும்; முன்னாள் வீரர் சொல்கிறார் !!

நடப்பு ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி தான் வெல்லும் என முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் டி.20 தொடரின் 13வது சீசன் துபாயில் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

மொத்தம் 58 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 39 போட்டிகள் நிறைவடைந்து விட்டதால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடி வருகின்றன.

அதே போல் ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதால், முன்னாள் வீரர் பலர் இந்த தொடரில் எந்த எந்த அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும், என்பது குறித்தும் எந்த அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும் என்பது குறித்தும் தங்களது கணிப்புகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடப்பு ஐபிஎல் தொடர் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஓஜா, இந்த வருட ஐபிஎல் தொடரை கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரக்யான் ஓஜா பேசுகையில், “பெங்களூர் அணி இந்த தொடரில் மிக அருமையாக விளையாடி வருகிறது. 12 வருடமாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் பெங்களூர் அணிக்கு இந்த தொடர் சரியான வாய்ப்பாக அமையும் என்று நம்புகிறேன். ஐபிஎல் கோப்பையை வெல்வது பெங்களூர் அணிக்கு இனி கனவாக இருக்காது என்று நம்புகிறேன், தனது கனவை அடைய பெங்களூர் அணி மிக அருகில் நெருங்கிவிட்டதாக நினைக்கிறேன். கிரிஸ் மோரிஸ், கோஹ்லி, டிவில்லியர்ஸ் அடித்து விளையாட ஆரம்பித்துவிட்டால் அவர்களை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம், அவர்கள் வித்தியாசமான வீரர்கள்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.