இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது, வருகிற மார்ச் 23 அன்று தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியை சமீபமாக பிசிசிஐ வெளியிட்டது அதில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான பிரசாந்த் கிருஷ்ணாவின் பெயர் இடம் பெற்றிருந்தது.
கடந்தாண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிய இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 6 போட்டிகளில் பங்கேற்று வெறும் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார் இவருடைய எக்கனாமிக் ரேட் 9.37.பின் அதனை தொடர்ந்து நடைபெற்ற விஜய் ஹசாரே போட்டியில் மிக சிறப்பாக செயல்பட்டு 6 போட்டிகளில் பங்கேற்று 14 விக்கெட்களை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் தனது பக்கம் ஈர்த்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டி இடம்பெற்றது குறித்து இந்திய அணியின் இளம் வீரர் பிரசாத் கிருஷ்ணா கூறியதாவது,இந்திய அணிக்கு தேர்வானது என்னுடைய கனவு போன்று உள்ளது மேலும் என்னுடைய லட்சியம் நிறைவேறியுள்ளது இந்திய அணிக்காக விளையாட ஆர்வமாக உள்ளேன் என்றும் என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது கடந்தாண்டு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் விராட் கோலி ரஷீத் கிருஷ்ணாவை வெகுவாக பாராட்டினார். அப்போது விராட் கோலி கூறியதாவது உங்களுடைய பந்து வீச்சு மிகவும் தனித்துவமாக உள்ளது, இந்த அளவுக்கு வேகத்தில் சிறந்த பவுன்சில் பந்து வீச்சு என்பது மிக சிறந்த ஒன்று என்று பாராட்டினார்.மேலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது உங்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்று பாராட்டினார்.
145 kmph+ அதிகமான வேகத்தில் பந்து வீச கூடிய பிரசித் கிருஷ்ணா அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட தகுதியானவர் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்த நிலையில் 14 மாதங்கள் கழித்து இந்திய அணிக்கு தேர்வானது குறிப்பிடத்தக்கது