2016ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரணவ் தனவடே பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் எதிரணியை துவம்சம் செய்து 1009 ரன் அடித்து அசத்தினார். இதனால், கிரிக்கெட்டில் அதிக ரன் அடித்தவர் என்ற பெருமையை பெற்றார். ஜனவரி 4, 2017 அன்று மீண்டும் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் ஜுன்ஜுன்வலா கல்லூரிக்காக விளையாடியவர் 45 ஓவர் போட்டியில் 236 ரன் அடித்து அட்டகாசப்படுத்தினார்.
இந்த இளம் வயதிலேயே பட்டய கிளப்பி வரும் இந்த இளம் வயது பிரணவ் தனவடே, இரட்டை சதம் அடித்த பிறகு தொடர்ந்து இதே போல் விளையாட வேண்டும் என்று தெரிவித்தார்.
“எனக்கு சந்தோசமாக இருக்கிறது. நான் நல்ல தொடக்கத்தை தர விரும்புகிறேன். நான் எனது எதிர்காலத்தை பற்றி அவ்வுளவாக யோசிக்கமாட்டேன், ஒவ்வொரு போட்டியையும் கொண்டாட நினைப்பேன்,” என இரட்டைசதம் அடித்த பிறகு பிரணவ் தனவடே கூறினார்.
2016ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரணவ் தனவடே பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் எதிரணியை துவம்சம் செய்து 1009 ரன் அடித்து அசத்தினார். இரண்டு வருடம் கழித்து மீண்டும் அவரது பெயர் இணையத்தளத்தில் வளம் வருகிறது.