இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி நாளை துவங்க இருக்கிறது. இதற்க்கான கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் இங்கே கணிக்க பட்டுள்ளது.
இந்தியா இங்கிலாந்து அணிகள் ஆட இருக்கும் நீண்ட தொடர் ஜூலை 3ம் தேதி துவங்க இருக்கிறது. இது செப்டம்பர் மதம் 11 தேதி வரை நடக்க இருக்கிறது. நீண்ட கால தொடரில் முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20தொடர் நாளை முதல் நடக்க இருக்கிறது.
அயர்லாந்து அணியை துவம்சம் செய்து 2-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி புதிய உத்வேகத்துடன் உள்ளது. தவான், ரோஹித், ரெய்னா, கே எல் ராகுல் ஆகியோர் பேட்டிங்கில் கலக்கிக்கொண்டு இருக்கின்றனர்.
ஸ்பின்னர் ஜோடியான சஹால், குல்தீப் இருவரும் அற்புதமாக பந்து வீசியுள்ளனர். மேலும், இங்கிலாந்து அணியுடனும் சிறப்பாக செயல்பட முனைப்புடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு இருக்க, இந்திய அணியின் கேப்டன் கோலி க்கு யாரை அணியில் சேர்ப்பது, யாரை நீக்குவது என்பதே பெரிய தலைவலியாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.
இதனை கருத்தில் கொண்டு, பிளேயிங் லெவெனில் ஆடும் கணிக்கப்பட்ட அணி பட்டியலிடப்பட்டுள்ளது.
முதல் டி20 போட்டியில் ஆடும் கணிக்கப்பட்ட இந்திய அணி
1. ஷிகார் தவான்
அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடிய இந்திய அணியின் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் அதிரடியாக விளையாடி அரைசதத்தைப் பூர்த்தி செய்தனர். தவான் 45 பந்துகளில் 5 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்தார்.