வீரேந்திர சேவாக்குடன் வாக்குவாதம் செய்தேனா ? பொய்யான தகவல் பரவியதாக பிரீத்தி ஜிந்தா முற்றுப்புள்ளி

வீரேந்திர சேவாக்குடன் வாக்குவாதம் செய்ததாக வெளியான செய்தியை, பஞ்சாப் அணி உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா மறுத்துள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்தொடரில் ஜெய்ப்பூரில் கடந்த 8-ந் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக பஞ்சாப் அணி கேப்டன் ஆர்.அஸ்வின் 3-வது வீரராக களம் இறங்கி டக்-அவுட் ஆனார். ஆட்டம் முடிந்ததும் ஆர்.அஸ்வின் முன்கூட்டியே களம் இறக்கப்பட்டது குறித்து பஞ்சாப் அணியின் ஆலோசகர் ஷேவாக், அணியின் இணை உரிமையாளரும், நடிகையுமான பிரீத்தி ஜிந்தா ஆகியோர் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கருண் நாயர், மனோஜ்திவாரி போன்ற பேட்ஸ்மேன்கள் இருக்கும் போது அஸ்வினை முன்கூட்டியே இறக்கியது தவறான யுக்தி என்று பிரீத்தி ஜிந்தா ஆவேசமாக ஷேவாக்கிடம் பேசியதாக தெரிகிறது. ஷேவாக் தனது தரப்பு விளக்கத்தை அளித்தாலும் பிரீத்தி ஜிந்தா திருப்தி அடையவில்லை. அதேசமயம் பிரீத்தி ஜிந்தாவின் நடவடிக்கையால் கோபத்துக்கு ஆளாகி இருக்கும் ஷேவாக் இந்த சீசனுடன், பஞ்சாப் அணியுடனான தனது 5 ஆண்டு கால உறவை முறித்து கொள்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
Preity Zinta and Virender Sehwag with Ness Wadia during day 2 of the Indian Premier League (IPL) auction held at the ITC Gardenia hotel in Bangalore on the 27th January 2018
Photo by Ron Gaunt / IPL / SPORTZPICS

ராஜஸ்தானிடம் பஞ்சாப் அணி தோல்வி அடைந்ததற்கு, கேப்டன் அஸ்வினை முன்கூட்டியே களமிறக்கியது தான் காரணம் என, அணியின் ஆலோசகர் சேவாக்குடன், உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா வாக்குவாதம் செய்ததாக கூறப்பட்டது. இதனால், ஆலோசகர் பொறுப்பில் இருந்து சேவாக் விலகப் போவதாகவும் தகவல் வெளியாகின.

இதை மறுத்துள்ள பிரீத்தி ஜிந்தா, போட்டி முடிந்த பின் வெற்றித்தோல்வி குறித்து விவாதிப்பது வழக்கமானது தான் என்றும், சேவாக்குடன் கருத்து வேறுபாடு ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

 

Editor:

This website uses cookies.